அமுத ஹரி ஆராமுத ஹரி இராமஹரி ஈகைஹரி .. உலகளந்தஹரி!
- கோ. அறிவுசெல்வி இராஜாராம்
அமுத ஹரி
ஆராமுத ஹரி
இராமஹரி
ஈகைஹரி
உலகளந்தஹரி
ஊழ்களையும் ஹரி
எண்ணில் ஹரி
ஏகாந்தஹரி
ஒருவனே ஹரி
ஓம்காரஹரி
அஃகும் எஃகுமே
ஹரி அடியார்
ஆழ்விணை அகற்றும் ஹரி
வாடிவாடி வந்தேன்
வடிவழகை காணவே
அமுதே ஆவியே போய்
காலாழ கண்ணநீர் கொண்டு
திருமணத்தூண் பற்றி நின்றேன்
பரந்தாமா பாவியேன் பாவம் களைந்து
நின்கழலில் கன்றென கதறுகிறேன் காகுத்தனே!
கண்ணிநுண் சிறுத்தாம்பினால்
கட்டுண்ட தாமோதரா
நாவினால் நாமம் கூறி
இன்புற்றேன் நாராயணா
அருள்வேண்டும் அடியவர் ஆனந்தம்பெறவே
அவதாரம் எடுத்துவந்த என் கோகுலகுயிலே
காத்திடுவான் என்றுமே
அன்னையின் ஆருயிர் தெய்வம்
அழகிய கண்ணன்
என்றுமே தொழும் இணையிலா பாலகன்
அன்னையர் இருவர் பெற்ற ஆராவமுதன்
கன்றுகள் மேய்ப்பவன் காத்திடுவான் என்றுமே!
சிந்தையில் புகுவானே
என்றுமே இளையவன் ஏதும் நிகரற்றவன்
குன்றம் எடுத்து குலத்தைக் காத்தவன்
தென்றலாய் திகழ்பவன் தேனாய் இனிப்பவன்
சென்று வணங்குபவர் சிந்தையில் புகுவானே!
(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)