அன்னை யசோதா பாலகனே.. பிருந்தாவன கோபாலனே!

Su.tha Arivalagan
Dec 23, 2025,11:25 AM IST

- கோ. அறிவுசெல்வி இராஜாராம்


அமுதத்தமிழ் அக்காரஹரி 

செந்தமிழ் செங்கான்மால்ஹரி 

தேன்தமிழ் தேவராஜஹரி 

ஈரத்தழிழ் ஆய்ப்பாடிஹரி 

ஆழித்தமிழ் ஆராவமுதஹரி 

முக்கனித்தமிழ் முகுந்தஹரி

சங்கத்தமிழ் சக்ரவர்த்திராமஹரி

முழ்கி முத்தெடுப்போம் 

முகாரி ஹரிநாமமதிலே




அன்னை யசோதை பாலகனே 

ப்ருந்தாவனக் கோபாலனே

அள்ளி அணைத்து 

மடிமீது அமர்த்திக்க  துடிக்கிறேனாடா

காதில் குண்டலம் அசைந்தாட

கழுத்தில் மணிச்சரம் இசைபாட

காலில் சதங்கை ஜதிபோட

நீ பார்த்தும் பாரா பாவனை ஏனோ கண்ணா!


கீதாநாயகன் க்ருஷ்ண 

பாதாரமே சரணம் பற்றிடும் பக்தர்கள் 

பாவவினை நீக்கி பரமபதம் தந்தருளும்

தேவகி பாலனாய் பிறந்து 

யசோதையின் திருமகளாய் வளர்ந்து 

கோகுலம் தன்னில் ஆனிறைகள் மேய்த்து 

கோபியர்க்கு அருள் செய்தானே!


நாவிலே நாரணன் 

மனதிலே மாதவன் 

விழிகளிலே மாலவன் 

நாளெல்லாம் அவனையே தொழுது 

கண்ணீர்மல்கி அச்சுதா அனந்தா 

கோவிந்தனை  பாடி பறை கொள்வோம்


(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)