A Tribute to Actor Nagesh: தாய் நாகேஷ்!
- பாரதிராஜன்
பழம்பெரும் நடிகர் நாகேஷ்.. 27/9/1933 அன்று இப்போதைய திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தவர்.
தமிழ், தெலுங்கு ,கன்னடம் &மலையாளப் படங்களில் நடித்தவர். 1000படங்களில் தன் திறமையை வெளிப்படுத்தியவர். சவுடால் வைத்தி தில்லான மோகனாம்பாள், செல்லப்பா காதலிக்க நேரமில்லை, மாது எதிர்நீச்சல், அநுபவி ராஜா அநுபவி இரட்டை வேடம், தருமி திருவிளையாடல், காவலர் வேடம் சரஸ்வதி சபதம்.
அன்பேவா, பட்டிணத்தில் பூதம். அநேகமாக எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்சங்கர், கமல், ரஜினி படங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். தில்லுமுல்லுவில் ரஜனி மீசை இல்லாத நடிப்பு, அவ்வைசண்முகி மாமி வேடத்தில் கமலை செதுக்கியவர், அபூர்வ ராகங்களில் டாக்டர் வேடம், கவிஞருக்கே நான்தான் டாக்டர் என ஸ்ரீவித்யா விடம் சொல்வது.
அபூர்வ சகோதரர்களில் படு பயங்கரமான வில்லன் வேடம். வசூல்ராஜா வில் கமலின் தந்தை இன்னும் இன்னும்.
நன்றாக நடனம் ஆடுபவர். நடிப்புக்காக பெற்ற விருதுகள். கலைமாமணி, நம்மவர் படத்திற்காக சிறப்பு தேசிய விருது. பிலிம்பேர் வாழ்நாள் விருது.
ஒரே நாளில் 5 படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்கும் அளவு பிசி நடிகர். பாண்டி பஜாரில் தியேட்டர், அரசாங்கத்தில் இருந்து ஒப்புதல் வரதாமதம் நாகேஷ் நேரில் சென்று அப்போது எம்ஜிஆர் அவர்கள் தான் முதல்வர். தியேட்டர் எதிரே பள்ளி அதனால் ஒப்புதல் இல்லை என்றறிந்து, பள்ளி நாட்களில் சினிமாவுக்கு அனுமதி இல்லை என வாக்குறுதி கொடுத்து ஒப்புதல் பெற்று அதைக் கடைப் பிடித்தார். தற்போது தியேட்டர் இல்லை.
ரொம்ப ரொம்ப இரக்க குணம் உள்ளவர். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத மிகப் பெரிய கலைஞர். அவரது துரதிர்ஷ்டம் இந்திய நடிகராக பிறந்தது. இதுவே வெளிநாட்டில் பிறந்திருந்தால் உலகப் புகழ் பெற்ற கலைஞராக சார்லி சாப்ளினையே தூக்கிச் சாப்பிட்டிருப்பார் நாகேஷ்.
(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)