பன்முகம் கொண்ட மேஜர் சுந்தர்ராஜன்.. Let us know about this Gentleman!

Sep 29, 2026,12:56 PM IST

- பாரதிராஜன்


மேஜர் என்பது ஒரு பொதுப் பெயர். இந்த பெயருடைய சுந்தர்ராஜன் அவர்களைப்பற்றிய கட்டுரை. 


சென்னை தொலைபேசி நிலைய முன்னாள் ஊழியர். நாடகநடிகர், குணசித்திர நடிகர், இயக்குநர் இப்படி பன்முகம் கொண்டவர் சுந்தரராஜன்.

 

எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, முத்துராமன், ஜெய்சங்கர், கமல், ரஜினி வரை நடித்தவர். குழந்தையும் தெய்வமும் படத்தில் ஜெய்சங்கரின் மாமனார் வேடத்தில் தூள்கிளப்பியவர். கே.பாலச்சந்தரின் மோதிரக்கையால் பரிணமித்து மேஜர் சந்திரகாந்த் படத்தில் நடித்த காரணத்தால் மேஜர் என அழைக்கப்பட ஆரம்பித்தார். 


எங்கிருந்தோ வந்தாள் படத்தில் சிவாஜியின் தந்தை வேடத்தில் பிச்சி உதறி இருப்பார். நாணல் படத்தில் திருடன் வேடத்தில் அசத்தி இருப்பார். அடுத்ததாக சிவாஜி அவர்களின் 125வது திரைபபடமான உயர்ந்த மனிதன் படத்தில் இடம் பெற்ற "அந்த நாள் ஞாபகம்" பாடலுக்காகவே பலர் படம் பார்த்தனர். அந்தப் பாடலில் மேஜரும், மேஜரான பங்களிப்பைக் கொடுத்திருப்பார்.




ரிக்ஷாக்காரன் படத்தில் நீதிபதி வேடம், அசோகன் மேஜரை மிரட்டிக்கொண்டே இருப்பார். கெளரவம் கேட்கவே வேண்டாம். அவ்வளவு ஏன் தங்க பதக்கம் படத்தில் ஸ்ரீகாந்த்தை காப்பாற்ற அவர் செய்வதை சிவாஜி கண்டுபிடிக்கும் முறை வேற லெவல்.  மேஜர் சுந்தரராஜன் ஏற்காத வேடங்களே இல்லை. 


தெய்வச்செயல் என்ற படத்தில் நடிப்பு அருமை. ரஜினி, ஸ்ரீதேவி நடித்த ப்ரியாவில் வில்லன் வேடத்தில்

அசத்தி இருப்பார். பாலாஜி அவர்களுடைய சொந்த படங்களில் மேஜர் கண்டிப்பாக இருப்பார். சிவாஜி அவர்கள் திரைப்பட நடிகர் சங்க தலைவராக இருந்த போது இவரும் ஒரு பொறுப்பில் இருந்தார். 


பந்தா இல்லாத நடிகர். 2000ஆம் ஆண்டு என் சகோதரி அவர்களுடைய 60ஆம் கல்யாணத்தில் கலந்து கொண்டது மட்டுமல்ல ,எல்லாருடைய மனதை கவர்ந்து பேசி அந்த இடத்தையே கலக்கினார். அதன்பிறகு அறுசுவை விருந்து முடித்து வீட்டுக்குக் கிளம்பினார். மறக்க முடியாத நினைவுகள்.


(எழுத்தாளர் பாரதிராஜனின் இயற்பெயர் ரங்கராஜன் , பாரதியார் பாடல்கள் மேல் உள்ள காதலால் பாரதிராஜன் என்கிற புனைப்பெயரில் கதை கட்டுரை மற்றும் கவிதை எழுதி வருகிறார். சென்னை அம்பத்தூரில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்