இயற்கை.. இனிதே ரசித்து வாழ்வோம் மானுடம்!
Apr 27, 2026,11:00 AM IST
- பால்குளம். ம. ஆனந்தராஜ்
ஆர்ப்பரிப்போடுத் துள்ளிக் குதித்த நீரோடை!
சலசலப்போடு மேனியை வருடும் காற்று!
பசும்புற்களால் மேலாடை போர்த்திய நிலம்!
கூட்டுக் குடும்பமாய்க் கூடியிருக்கும் மரங்கள்!
வாடகையின்றி வாழும் பறவைகளின் கூடுகள்!
கூடாரமாக ஆகாயம் அரணாக மலை!
தெளிந்த நீரோடையில் துள்ளிய கயல்!
அடர்ந்த வனத்தில் ஆனந்தமாய் விலங்குகள்!
இறைவன் படைப்பின் படைத்த பயனை!
இனிதே ரசித்து வாழ்வோம் மானுடம்!