- ஔவை அ.ர.தீபாரவி
விதைக்குள்
காடிருக்கு
அந்தக்
கூட்டில்
ஒளிந்திருக்கு
விதைத்தவர்
உறங்கினாலும்
இங்கே
விதைகள்
உறங்கிடுமோ?
உயிருக்கு
வழியாக
உயிர்வளி
தருவது
மரந்தானே

நா
ருசிக்கப்
பழங்களைத்
தருவதும்
அதுதானே
மண்ணுக்கும்
விண்ணுக்கும்
பாலமமைக்க
மழையைத்
தருகுதே
மானிடர்க்கு
என்றும்
மருந்தும்
விருந்தும்
ஆகிறதே
இளைப்பாற
நிழலும்
மழலை
மகிழ
ஊஞ்சலுமாகுதே
பல்லுயிர்க்கும்
புகலிடமாம்
சரணாலயமாம்
மரங்கள்
வரங்களாம்
உணவின்றிப்
பலநாள்கள்
நீரின்றி
சிலநாள்கள்
வாழலாம்
உயிர்வாழ்தல்
இயலுமோ?
(கவித்துளி வழங்கும் சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. ஔவை அ.ர.தீபாரவி கோவையைச் சேர்ந்தவர். பி.காம்.டி.டி.எட், தமிழ் இசை இலக்கிய ஆர்வலர். தமிழ் பாடுவோம், தமிழ் அருவி, கவித்துளி நிறுவனர். ஈரவிழி இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளர். ஐந்தாண்டு காலமாக இணையத்தில் ஈடில்லாத் தமிழ் சேவை. கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பணிதனைச் செவ்வனே செய்து வருகிறார். கவிஞர்களின் உள்ளாார்ந்த திறனை வெளிக்கொண்டு வருவதே இவருடைய நோக்கம்).
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}