சென்னை: தமிழக அரசியலில் அடுத்தடுத்த போராட்ட அறிவிப்புகளால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பழனி முருகன் கோவில் நில மோசடி விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், மேகதாது அணைப் பிரச்சினை தொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்தும் கண்டனப் போராட்டங்களை அறிவித்துள்ளனர்.
பழனி முருகன் கோவில் நில மோசடி வழக்கு:

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் நடைபெற்ற மோசடி தொடர்பான வழக்கை சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றக் கோரி அதிமுக சார்பில் வரும் ஜூலை 25-ஆம் தேதி கண்டனப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: பழனி கோவில் நில மோசடி விவகாரத்தில் தற்போதைய CBCID விசாரணை திருப்திகரமாக இல்லை.இந்த முறைகேட்டிற்குத் துணையாக இருந்தவர்களையும், அதற்குத் தூண்டியவர்களையும் காப்பாற்றும் நோக்கில் மட்டுமே தற்போதைய விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். உண்மையான குற்றவாளிகள் வெளிச்சத்திற்கு வர வேண்டும் எனில், இவ்வழக்கை உடனடியாக CBI-க்கு மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேகதாது அணைக்கு எதிர்ப்பு:
கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்ட எடுக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு எதிராகப் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தேமுதிக சார்பில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளதாவது:

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் பிடிவாதமான போக்கைக் கண்டித்து, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தேமுதிக உறுதியுடன் நிற்கும். காவிரி உரிமையை மீட்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும் இந்த ஆர்ப்பாட்டம் ஒகேனக்கலில் வலுவாக முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு உட்கட்சி விவகாரங்கள், குதிரை பேரம், கட்சி தாவல்கள் போன்ற விவகாரங்களில் பரபரப்பாக இருந்த அரசியல் கட்சிகள் தற்போது பொது பிரச்சனைகளுக்காக போராட்டங்களை அறிவித்து தங்களின் முக்கியத்துவத்தை நிரூபிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
If you are brave enough to say goodbye .. யோசிக்கவே யோசிக்காதீங்க!
If you Say goodbye bravely .. தயங்காமல் சொல்லிடுங்க!
உழைப்பின்றி உயர்வில்லை!
டில்லியில் உச்சகட்ட பதற்றம் : 3வது நாளாக முடங்கிய பார்லிமென்ட்...எதிர்க்கட்சிகள் போராட்டம்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: RailOne செயலியில் 3% கட்டணச் சலுகை நீட்டிப்பு
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்...அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
தலைமைச் செயலகத்தில் புகுந்து போராட முயன்றது ஏன்.. அறிவு விளக்கம்
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}