ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

Jul 22, 2026,06:05 PM IST

- கவிதாயினி டாக்டர் எஸ்.மணிமேகலை


பகலில் வீரனாய் தெரியும் ஆண்மகன்

இரவில் குழந்தையாய் மாறிடுவான்


கண்ணீர் அவனுக்குள் இல்லையா என்ன

கண்ணீரை மறைக்கத் தெரிந்தவன் அவன்


குடும்பத்திற்காக ஓயாது உழைப்பவன்

குதூகலம் என்று ஒன்றை அறியாதவன்


தான் பார்க்காததை தன் குழந்தையை பார்க்க வைப்பான்

தான் ஏங்கியதை தன் குழந்தைக்கு கிடைக்கச் செய்வான்




ஆண்மகன் என்ன அழுத்தக்காரனா

ஆண்மகன் என்ன ஆங்காரமானவனா


அன்பான சொல்லால் அணைத்துப் பாருங்கள்

ஆறுதல் வார்த்தையால் மனம் வருடி பாருங்கள்


முக்கிய நாட்களின் தேதிகளை மறதியால் தவறவிட்ட வில்லனாய் தோன்றலாம்

முக்கிய பொறுப்பை மறந்து விட்டதில் மன்னனாகவும் அவன் இருக்கலாம்


சிரிப்பை மறந்து சிந்தனையில் சிறகடிப்பவன்

சீரிய கொள்கை என்று அவனை சிறைப்படுத்தாதீர்


அவனது உலகமோ மிகச் சிறியது அவனது எண்ணமோ மிகப்பெரியது


அவனுக்குள்ளும் மஞ்சம் நிறைக்க காதல் உண்டு

அவனுக்குள்ளும் நெஞ்சம் நிறைய வலிகளும் உண்டு


ஆண் மகனின் குறைகளை எவரும் கேட்பதும் இல்லை


ஆண் மகனின் அழுகையை எவரும் பார்த்ததும் இல்லை


அவனை அவனாகவே வாழ விடுங்கள்


அதுவே நீங்கள் அவனுக்குச் செய்யும் நியாயங்கள்!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்