மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.. உங்களிடம் கேட்கப்படவுள்ள 33 கேள்விகள்!

Jul 11, 2026,04:53 PM IST

சென்னை: மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தநடைபெறவுள்ள நிலையில் முதல் கட்டமாக வீட்டுப் பட்டியலைத் தயாரிக்கும் பணிகள் தொடங்கவுள்ளது. அதில் 33 விதமான கேள்விகள் கேட்கப்படவுள்ளன. 


முதல் கட்டமாக நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, வீடுகளின் தரம் மற்றும் வசதிகள் கணக்கிடப்படும். 


2வது கட்டமாக 2027 பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெறும். இதில் மக்கள் தொகை, பொருளாதாரம் மற்றும் சாதிவாரி விவரங்கள் சேகரிக்கப்படும். 


மக்களிடம் கேட்கப்படவுள்ள 33 விதமான கேள்விகள் குறித்தப் பட்டியலைப் பார்க்கலாம். இதில் தவறான பதில்களைத் தரக் கூடாது. அப்படிக் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கணக்கெடுப்பாளரிடம் சரியான பதிலைக் கொடுங்கள்.


33 கேள்விகள் விவரம்:




1. வரிசை எண்

2. கட்டிட எண்

3. வீட்டு எண்

4. தரையின் பிரதான கட்டுமான பொருள் (மண் தரையா, டைல்ஸ் போட்ட தரையா என்பது உள்ளிட்ட தகவல்)

5. சுவரின் பிரதான கட்டுமான பொருள் (மண் சுவரா, கான்க்ரீட் சுவரா என்ற தகவல்)

6. கூரையின் பிரதான கட்டுமான பொருள் (கான்க்ரீட் கூரையா, ஓட்டு வீடா, குடிசையா என்ற விவரம்)

7. வீட்டின் பயன்பாடு (வாடகை வீடா, சொந்த உபயோகமா, கடையா என்பது உள்ளிட்ட  தகவல்)

8. வீட்டின் நிலைமை (நல்ல நிலையில் இருக்கா, சேதமடைந்து இருக்கா என்ற தகவல்)

9. குடும்ப எண்

10. குடும்பத்தில் வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை

11. குடும்ப தலைவரின் பெயர் 

12. பாலினம்

13. குடும்பத் தலைவரின் ஜாதி

14. வீட்டின் உரிமை நிலை (சொந்த வீடா, வாடகையா)

15. வசிக்கும் அறைகளின்  எண்ணிக்கை (இதில் சமையலறை, பாத்ரூம், ஸ்டோர் ரூம் ஆகியவற்றைச் சேர்க்கக் கூடாது)

16. திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை

17. குடிநீருக்கான பிரதான ஆதாரம்

18. குடிநீருக்கான பிரதான ஆதாரம் அமைந்துள்ள இடம் (வீட்டு வளாகம், வீட்டுக்கு அருகே, தூரத்திலிருந்து இப்படி)

19. வீட்டில் உள்ள விளக்குக்கான ஆதாரம் (மின்சார விளக்குகள், மண்ணெண்ணெய் விளக்கு, சூரிய சக்தி மின்சாரம் இப்படி)

20. கழிப்பிடம் வசதி (தனிப்பட்ட முறையில் உள்ள கழிப்பறைகள், பொதுக் கழிப்பறை உள்ளிட்ட தகவல்)

21. கழிப்பிடம் வகை (செப்டிக் டேங்குடன் கூடியது உள்ளிட்ட தகவல்)

22. கழிவு நீர் வெளியேறும் இணைப்பு

23. வீட்டு வளாகத்திற்குள் குளிக்கும் வசதி




24. சமையலறை வசதி ( காஸ் சிலிண்டர், இயற்கை எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவை)

25. சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள் (மண்ணெண்ணெய், விறகு, சமையல் எரிவாயு)

26. வானொலி/ டிரான்ஸிஸ்டர்

27. தொலைக்காட்சி

28. இணையதள வசதி

29. மடிக்கணினி/ கணினி

30. தொலைபேசி/ கைபேசி/ ஸ்மார்ட்போன்

31. மிதிவண்டி & ஸ்கூட்டர்/ மோட்டார் சைக்கிள்/மொபட்

32. கார் / ஜீப் / வேன்

33. குடும்பத்தில் உட்கொள்ளும் பிரதான உணவு தானியம்

34. கைபேசி எண்

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவராத்திரி ஸ்பெஷல்.. இன்றும் நாளையும் என்னவெல்லாம் செய்ய வேண்டும்.. Full List!

news

Thentamil Editorial: பக்தியும் பரவசமும் சங்கமிக்கும் நவராத்திரி.. மைசூர் முதல் குலசேகரப்பட்டினம் வரை

news

நவராத்திரி வந்தாச்சு.. விதம் விதமாக கொலு வச்சுக் கொண்டாடத் தயாரா மக்களே?

news

பஞ்சர் தாத்தா.. இளநீர் தாத்தா.. கூழ் பாட்டி மற்றும் தேன் வாழைப்பழம்!

news

Purattasi Special Dish: வெண்டைக்காய் சாம்பார் செய்வது எப்படி?

news

தமிழகத்தில் தொடரும் மழை: 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

news

டெல்லியில் உச்ச கட்ட பதற்றம்: கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, நேஹா போரா கைது!

news

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் பிரதமருக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்

news

மாமன் காரன் பெத்த புள்ளே மனசைத் தொறந்து பேசும் புள்ளே!

அதிகம் பார்க்கும் செய்திகள்