அண்ணாமலையின்'We The Leaders' பொள்ளாச்சியில் நாளை முதல் மாநாடு

Jul 11, 2026,10:50 AM IST

பொள்ளாச்சி: தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் 'We The Leaders' அமைப்பின் முதலாவது மாநாடு நாளை பொள்ளாச்சியில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது."போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு மாநாடு" என்ற முழக்கத்துடன், பொள்ளாச்சியிலிருந்து இந்த விழிப்புணர்வுப் பயணம் அதிகாரப்பூர்வமாகத் துவங்குகிறது.


"மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்":

"மாற்றம் நம்மிடமிருந்து துவங்கட்டும்! போதையில்லா தமிழகம் பிறக்கட்டும்!" என்ற உன்னத நோக்கத்தை மையமாகக் கொண்டு இந்த மாநாடு நடத்தப்படுகிறது. எதிர்காலத் தூண்களாக விளங்கும் மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் மற்றும் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் போதை அரக்கனின் பிடியிலிருந்து மீட்பதற்கான ஒரு முக்கிய ஆரம்பப் புள்ளியாக இந்த மாநாடு அமையும் என அண்ணாமலை மற்றும் அவரது அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


தீவிரமடையும் ஏற்பாடுகள் :




நாளை நடைபெறவிருக்கும் இந்த பிரம்மாண்ட மாநாட்டிற்காக பொள்ளாச்சியில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான இருக்கை வசதிகள், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்வதில் தன்னார்வலர்களும் நிர்வாகிகளும் சுறுசுறுப்புடன் ஈடுபட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, மாநாட்டுப் பந்தல் மற்றும் இதர உள்கட்டமைப்புப் பணிகள் 75 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய பணிகளும் இன்று இரவுக்குள் முழுமையாக முடிக்கப்பட்டு, மாநாட்டுத் திடல் தயார் நிலைக்குக் கொண்டு வரப்படும் என ஏற்பாட்டாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


முக்கியத்துவம் பெறும் முதல் மாநாடு:

'We The Leaders' அமைப்பின் மூலம் அண்ணாமலை நடத்தும் இந்த முதல் மாநாடு, அரசியல் களத்திலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில், பொள்ளாச்சியில் இருந்து தொடங்கும் இந்த மாநாட்டில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

World Population Day: உலக மக்கள் தொகை நாள் ஏன் கொண்டாடப்படுது தெரியுமா?

news

ஒரு நதியின் பயணம்

news

வாரிசுகளுக்கு அரசு வேலை வேண்டும் : பாமக அன்புமணி வலியுறுத்தல்

news

அண்ணாமலையின்'We The Leaders' பொள்ளாச்சியில் நாளை முதல் மாநாடு

news

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.. உங்களிடம் கேட்கப்படவுள்ள 33 கேள்விகள்!

news

கரூரில் தேர்தல் பிரச்சாரச் சம்பவத்தின் போது நடந்தது என்ன? .. விளக்கிய முதல்வர் விஜய்

news

ஓடு ஓடு ஓடுன்னு.. திருச்சி ஏர்போர்ட்டுக்கு ஓடியது யார்?.. முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி

news

கரூரில்.. 31 பேருக்கு பணியிட ஆணை வழங்கிய முதல்வர் விஜய்.. யார் யாருக்கு எங்கு பணி?

news

தேர்தல் வழக்கு எதிரொலி.. திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தத் தடை

அதிகம் பார்க்கும் செய்திகள்