- ஸ்வர்ணலட்சுமி
ஆண்டுதோறும் ஜூலை மாதம் 11-ம் நாள் மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தினால் உலக மக்கள் தொகை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
1987 ஆம் ஆண்டில் இதே நாளில் உலக மக்கள் தொகை 5 பில்லியனை தாண்டியது. உலகளாவிய மக்கள் தொகை பிரச்சினைகள் அதாவது மக்கள் தொகை அதிகரிப்பு, சுகாதாரம், குடும்பக்கட்டுப்பாடு, வறுமை, பாலின சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
வரலாறு:
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின்(UNDP) ஆலோசனையின் பேரில் 1989 ஆம் ஆண்டு முதல் உலக மக்கள் தொகை தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
2026 ஆம் ஆண்டின் உலக மக்கள் தொகை தின கருப்பொருள் (Theme):

2026 ஜூன் மாத ஐ.நா தரவுகளின் படி உலக மக்கள் தொகை 8.33 பில்லியனை எட்டியுள்ளது என்று கூறப்படுகிறது.
கருப்பொருள் :
"இளைஞர்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை இன்று மற்றும் எதிர்காலத்தை நினைவாக்குதல் "
World Population Day 2026 Theme:
"Realizing the hopes and aspirations of young people - today and for the future "
இளைஞர்களின் குரல்
2026 ஆம் ஆண்டின் கருப்பொருள் எதனை உணர்த்துகிறது என்றால் - இளைஞர்களின் எதிர்கால இலக்குகள்,குடும்பத்தை பற்றிய திட்டமிடல் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை உணர்த்துகிறது.
இளைஞர்களுக்கு தேவையான கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் பாலின சமத்துவம் ஆகிய துறைகளில் இளைஞர்களை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே நிலையான வளர்ச்சி அடைய முடியும் என்பதனை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது.
விழிப்புணர்வுக்கான சில சிறந்த தமிழ் வாசகங்கள்:
"மக்கள் தொகை பெருக்கத்தை தவிர்ப்போம், இயற்கை வளத்தை காப்போம்!".
"அதிகரிக்கும் மக்கள் தொகை- குறையும் இயற்கை வளம்! "
"ஒரு குடும்பம் - இரு குழந்தைகள்!பூமியை பாதுகாப்போம்!"
"சிறு குடும்பம் -செல்வக் குடும்பம்!"
விழிப்புணர்வு மேற்கோள்கள்:
"மக்கள் தொகை பெருக்கம் என்பது தனி நபர் பிரச்சனை அல்ல, ஒட்டுமொத்த பூமிக்கான சவால்,விழிப்புணர்வை விதைப்போம்!"
"பூமிப்பந்து மனிதர்களுக்கு மட்டுமே ஆனது அல்ல,மற்ற உயிரினங்களுக்கும் இடமளிப்போம், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவோம் ".
"அதிகரிக்கும் மக்கள் தொகை என்பது பூமிக்கு நாம் வைக்கும் அவசர கால எச்சரிக்கை,சிறிய குடும்பமே சிறப்பான எதிர்காலம் ".
"குடும்பத் திட்டமிடல் என்பது வெறும் கட்டுப்பாடு அல்ல உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான அடித்தளம் ".
"எதிர்கால சந்ததிக்கான சிறந்த சொத்து அதிக மக்கள் தொகை அல்ல, வளமான இயற்கை மற்றும் சிறந்த கல்வி ஆகும் ".
"மக்கள் தொகை பெருக்கம் நாட்டின் முன்னேற்றத்திற்கும், மக்களின் தனிநபர் வாழ்க்கை தரத்திற்கும் பெரும் தடையாக மாறுகிறது ". என்று முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் அன்றே கூறியுள்ளார்.
"பூமி ஒவ்வொரு மனிதனும் தேவைக்கும் போதுமானதை அளிக்கிறது,ஆனால் அவனது பேராசைக்கு அல்ல ".என்று மகாத்மா காந்தி அவர்கள் கூறிய கூற்றை உலக மக்கள் தொகை நாளன்று நாம் அனைவரும் நினைவில் கொள்வோமாக...
மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
அன்பு எனும் ஆயுதம்
அரசு நிகழ்ச்சிகளில் தேசியப் பாடலுக்கே முதலிடம்: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு!
How We Can Enjoy Ourselves Without Medicine.. மகிழ்ச்சியாக இருக்க மருந்தே தேவையில்லை
World Population Day: உலக மக்கள் தொகை நாள் ஏன் கொண்டாடப்படுது தெரியுமா?
ஒரு நதியின் பயணம்
வாரிசுகளுக்கு அரசு வேலை வேண்டும் : பாமக அன்புமணி வலியுறுத்தல்
அண்ணாமலையின்'We The Leaders' பொள்ளாச்சியில் நாளை முதல் மாநாடு
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு.. உங்களிடம் கேட்கப்படவுள்ள 33 கேள்விகள்!
கரூரில் தேர்தல் பிரச்சாரச் சம்பவத்தின் போது நடந்தது என்ன? .. விளக்கிய முதல்வர் விஜய்
{{comments.comment}}