அன்பு எனும் ஆயுதம்

Jul 11, 2026,01:36 PM IST

- செ. சாந்தி சின்னத்தம்பி


ஆயுதம் என்ற பேரெதற்கு அன்பிற்கு ?


சிந்தித்தேன்...


பகைவனை வீழ்த்தும் கூர்வாளின் வேகம் போல் 

மனங்களை வீழ்த்துவதாலா?...


பாறையை உடைக்கும் உளியின் கூர்மை போல் 

கல் மனங்களை உடைப்பதாலா?


களைகளை வெட்டும் அரிவாள்போல் 

இறுமாப்புகளை வெட்டுவதாலா?...


துணியிடைக் கிழிசலை இணைக்கும் ஊசியைப் போல் 

விலகிய மனங்களை இணைப்பதாலா ?


பூமியைப் பிளக்கும் ஆழ்துளைக் கருவி போல் 

மனக்குற்றங்களைத் தூர்வாரித் துளைப்பதாலா?...




அறிந்தேன்....

முடிவுக்கு வந்தேன்...


ஆயுதம் என்பது தற்காப்பு ...


அன்பு என்பதுதான் காப்பு.... உணர்ந்தேன் ....


அன்பு என்னும் ஆயுதம் புதிய வார்ப்பு ....


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்