ஜூலை 15ல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு

Jul 09, 2026,04:02 PM IST
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட 'லுக் அவுட்' (Look Out) நோட்டீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும், வரும் 15-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையையும் நீதிமன்றம் விதித்துள்ளது.

நெடுஞ்சாலை அமைப்பதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குத் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் (DVAC) சோதனைகளை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளதாக அவர் கூறி இருந்த நிலையில், கடந்த வாரம் சிங்கப்பூர் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

இதற்கிடையில் அவர் சிங்கப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் நோக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் 'லுக் அவுட்' நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தனக்கு எதிராகப் பதியப்பட்ட வழக்கைத் ரத்து செய்யக் கோரியும், இந்த லுக் அவுட் நோட்டீஸை எதிர்த்தும் எ.வ.வேலு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.



இந்த மனுவை இன்று (09/07/2026) விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. எ.வ.வேலுவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. வரும் ஜூலை 15-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை முன்னிலையில் எ.வ.வேலு விசாரணைக்காகக் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.

வரும் ஜூலை 27-ஆம் தேதி வரை எ.வ.வேலுவுக்கு எதிராக எவ்விதக் கடுமையான நடவடிக்கைகளையும் (கைது போன்ற நடவடிக்கைகள்) லஞ்ச ஒழிப்புத் துறை எடுக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எ.வ.வேலு தன் மீதான வழக்கைத் ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்துள்ள மனு குறித்து, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை (DVAC) வரும் ஜூலை 27-ஆம் தேதிக்குள் விரிவான பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த உத்தரவின் மூலம் எ.வ.வேலுவுக்குத் தற்காலிக நிவர்த்தி கிடைத்துள்ள போதிலும், வரும் 15-ஆம் தேதி நடைபெறவுள்ள லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

North East Monsoon On the way: சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

news

அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!

news

Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்

news

6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

news

Good Evening Friends... சத்தான சுவையான ராகி அடை செஞ்சு சாப்பிடலாமா?

news

கத்திரிக்காய் நீல கத்திரிக்காய்.. அதிலிருந்து.. சுட்ட கத்தரிக்காய் கொத்சு!

news

நவராத்திரி.. சோழர் காலத்தில் அரசு விழா.. நாயக்கர்கள் காலத்தில் 9 நாள் திருவிழா!

news

சமையல் With ஸ்வர்ணா.. முருங்கைக்கீரை தக்காளி ரசம் .. சூப்பாகவும் குடிக்கலாம்

news

திடீர் உடல்நலக்குறைவு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்