அமைச்சர் மரியா வில்சன் புதுச்சேரி கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு

Jul 09, 2026,04:02 PM IST
சென்னை: சொத்து தகராறு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் மரியா வில்சனுக்கு விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூலை 9, 2026) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமைச்சர் மரியா வில்சனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சொத்து தகராறு காரணமாக அமைச்சர் மரியா வில்சன் தனது சகோதரரையும், அவரது மனைவியையும் தாக்கியதாகக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையத்தில் வரும் ஜூலை 13-ஆம் தேதி அமைச்சர் மரியா வில்சன், அவரது தந்தை மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே ஆணையிடப்பட்டிருந்தது.



ஆனால் சட்டமன்ற கூட்டத் தொடர், பட்ஜெட் வேலைகள் என பல காரணங்கள் சொல்லி, கோர்ட்டில் ஆஜராகாமல் மரியவில்சன் தவிர்த்து வந்தார். தொடர்ந்து இவர் கோர்ட்டில் ஆஜராவதை தவிர்த்து வருவதை கண்டித்த கோர்ட், நேரில் ஆஜராவதற்கு எத்தனை முறை அவகாசம் கேட்பீர்கள். வார விடுமுறையில் கூட ஆஜராக முடியாதா? என கடுமையாக கேள்வி எழுப்பி இருந்தது. 

இதற்கிடையே, இந்த வழக்கில் புதுச்சேரி நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராக வேண்டிய சூழல் இருந்தது. இதனால், அமைச்சர் மரியா வில்சன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், புதுச்சேரி நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை இன்று விசாரித்த புதுச்சேரி நீதிமன்றம், அமைச்சர் தரப்பின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, புதுச்சேரி நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் மரியா வில்சனுக்கு விலக்கு அளித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இருப்பினும், சொத்து தகராறு தொடர்பான இந்த குடும்பப் பிரச்சனைக்கு சுமுக தீர்வு காணும் வகையில், ஏற்கனவே திட்டமிட்டபடி வரும் ஜூலை 13-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்ற சமரச தீர்வு மையத்தில் அமைச்சரும், அவரது குடும்பத்தினரும் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

North East Monsoon On the way: சென்னை உட்பட 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

news

அதிமுகவில் இருந்து மேலும் 15 பேர் தவெகவுக்கு வருகிறார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!

news

Thentamil தலையங்கம்: எங்க வழி தனி வழி.. அரசியல் கணக்குகளும்.. திமுகவின் புதிய பாதையும்

news

6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது செல்லும்.. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

news

Good Evening Friends... சத்தான சுவையான ராகி அடை செஞ்சு சாப்பிடலாமா?

news

கத்திரிக்காய் நீல கத்திரிக்காய்.. அதிலிருந்து.. சுட்ட கத்தரிக்காய் கொத்சு!

news

நவராத்திரி.. சோழர் காலத்தில் அரசு விழா.. நாயக்கர்கள் காலத்தில் 9 நாள் திருவிழா!

news

சமையல் With ஸ்வர்ணா.. முருங்கைக்கீரை தக்காளி ரசம் .. சூப்பாகவும் குடிக்கலாம்

news

திடீர் உடல்நலக்குறைவு: இலங்கை முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச மருத்துவமனையில் அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்