- கவிஞர் பி.எஸ். முருகேசன்
காடு களனியெங்கும்
கருவ மொளச்சு கெடுக்குதே
ஆறு குளங்கள் எல்லாம்
சாக்கடையா மிதக்குதே
நெனச்ச இடங்களிலே
நெகிழிகள் பறக்குதே
மண்ணின் வளங்கள் எல்லாம்
மாசுபட்டு போனதே
சுத்தம் சுகாதாரம்
கேள்விக்குறி ஆனதே
உள்ளபடிக் குடிநீரும்
உப்பும் தான் கரிக்குதே
காற்றிலே மாசு கலந்து
கவலை அளிக்குதே
உணவிலே கலப்படம்
உலகினில் உலவுதே

மதுவினால் மனித உயிர்
மடிந்து தான் போகுதே
மரபணு மாற்றத்தால்
உயிரினம் சாகுதே
விளையும் நிலம்
வீடாக மாற்றி
விற்பனைக்கு போகுதே
விவசாயம் கேள்விக்குறியாக
மாறித்தான் போனதே
எல்லாமே மாற்றம் என்று
ஏமாற்றம் சொல்லுதே
எதை நம்பி வாழ்வது
என்று மனம்
ஏக்கத்துடன் ஓடுதே
மாசு இல்லாத வாழ்க்கைக்கு என்று
அது மாறினால் மகிழ்ச்சி தான் நன்று
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
வடகிழக்கு பருவமழை: 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...தமிழகத்தில் வெளுத்து வாங்க போகும் மழை
தென்தமிழ் தலையங்கம்: உயிருக்குக் குறி வைத்த ஒரு சொல்.. அனோஜன் கற்றுக் கொடுத்த பாடம்!
இந்தியாவை விட்டு வெளியேற பாலிவுட் நடிகர் இம்ரான் கானுக்கு உத்தரவு
Know about El Nino: அக்டோபர் அனலும் எல் நினோவும்..!
Evening Motivation: கதையல்ல நிஜம்: அந்தக் காலம் vs இந்தக் காலம்!
தாய்க்காக எதையும் இழக்கலாம்.. ஆனால் யாருக்காகவும் தாயை இழந்து விடாதீர்கள்!
“மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போங்க முதலமைச்சரே!”: மு.க.ஸ்டாலின் கடும் சாடல்!
நகைகள்.. அன்று மாதவி அணிந்த ஆபரணங்கள் என்னென்ன தெரியுமா?
North East Monsoon: மக்களே குட் நியூஸ்.. தொடங்கியது வட கிழக்குப் பருவ மழை.. வானிலை மையம் அறிவிப்பு!
{{comments.comment}}