கண்ணூர்: பாஜகவில் இருந்து விலகிய பிரபல மலையாள நடிகர் தேவன், விரைவில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணையவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் அரசியலுக்கு வரும் நடிகர்கள் வெகு வெகு அரிது. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் நிறையப் படங்களில் நடித்துள்ள நடிகர் தேவன் அரசியலில் இருந்து வருகிறார். தமிழில் விஜயகாந்த்துடன் ஆனஸ்ட் ராஜ், ரஜினிகாந்த்துடன் பாஷா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் தேவன்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் பாஜகவிலிருந்து விலகினார். தற்போது தவெகவில் அவர் சேரப் போவதாக கேரளா முழுவதும் பரபரப்பு கிளம்பியுள்ளது. அதை தற்போது தேவன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியின் விவரம்:

நான் பாஜகவிற்காக மிகவும் உறுதியாகவும், தீவிரமாகவும், பல அபாயங்களை எதிர்கொண்டும் பணியாற்றினேன். ஆனால், என்னுடைய லட்சியத்தையும் திட்டமிடலையும் பாஜக தலைமை புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் இவற்றுக்கெல்லாம் எதிராக செயல்படுகிறார்கள்.
பாஜகவிற்கு தேர்தலில் வெற்றி பெறுவதில் விருப்பம் இல்லை என்றும், பண ஈட்டுவதிலேயே அவர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என்றும் நான் நினைக்கிறேன். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால் என்னை முடக்கினார்கள்.
2024-25 காலகட்டத்திலேயே இக்கட்சியிலிருந்து விலக யோசிக்கத் தொடங்கினேன். பாஜகவில் தொடர்வது அரசியல்வாதியாக என்னுடைய லட்சியத்தை நிறைவேற்றாது என்பதால் அக்கட்சியிலிருந்து விலகினேன்.
நான் பாஜகவிலிருந்து விலகியதை அறிந்து, விஜய் தரப்பில் இருந்து சிலர் என்னை அணுகி தவெக-வில் இணைய விருப்பமா என்று கேட்டனர். எங்களுக்குள் மிக விரிவான மற்றும் சுவாரசியமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, சென்னையில் உள்ள தவெக மூத்த நிர்வாகிகளுடன் ஆன்லைன் வாயிலாக ஆலோசனை நடத்தினேன். கொள்கை அளவில் இதில் எனக்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நடிகர் விஜய்யை நேரடியாகச் சந்தித்துப் பேச விருப்பம் தெரிவித்தேன். அவரைச் சந்திப்பதற்காக செப்டம்பர் 10-ஆம் தேதி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறேன். இறைவனின் அருளால் விரைவில் தவெக-வில் இணைவேன் என்று நடிகர் தேவன் தெரிவித்துள்ளார்.
நடிகர் தேவன் தவெகவில் இணைந்த பிறகு கேரளத்தில் தலைமைப் பதவியை அவருக்குக் கொடுக்க விஜய் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. விஜய்க்கு கேரளத்தில் மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அதேபோல அங்கு தவெகவும் இயங்கி வருகிறது. பிரபலமான நடிகரான தேவன் வருகையால் தவெகவுக்கு கேரளத்தில் புது அடையாளம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}