- இரா. மும்தாஜ் பேகம்
தர்மம் என்பது தேடி போய் செய்வது உதவி என்பது நாடி வரும்பவர்களுக்கு செய்வது.
பெற்ற உதவிக்கு நன்றி மறக்க கூடாது. செய்த உதவிக்கு நன்றியை எதிர்பார்க்கக் கூடாது
கொடுப்பது சிறிது என்று தயங்கக் கூடாது. பெறுபவருக்கு அது பெரியது. எடுப்பது சிறியது என்று திருடக்கூடாது இழந்தவருக்கு அது பெரியது. அன்னை தெரசா
உதவியை உயர்ந்தவர்களுக்கு செய்வதை விட ஒருவரை உயர்த்துவதற்காக செய்வதே சிறந்தது
பெற்ற உதவிக்கு நன்றி சொல்லும் பழக்கமும் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் பக்குவமும் உள்ளவர்கள் எல்லோருடைய இதயத்திலும் உயர்ந்த நிலையில் இருப்பார்கள்.
உதவும் உள்ளம் இருப்பவர்களுக்கு வசதிகள் இருப்பதில்லை. வசதிகள் இருப்பவர்களுக்கு உதவும் எண்ணம் வருவதில்லை.
ஒரு சிலநிகழ்வுகளை ஆராய்ந்து மனதை காயப்படுத்தி கொள்வதை விட அனைத்தும் நமக்கான பாடம் என்று ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும்.

இந்த அழகான உலகத்தை சுற்றிப் பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் நாம். மகிழ்ச்சியோடு சுற்றிப் பார்ப்போம். ஒருநாள் திரும்பிச் செல்ல தான் போகிறோம் தேதிகள் மட்டும் ரகசியம்.
சூடாக இருக்கும் காபியை குடிக்கும்போது பொறுமையும் நிதானமும் இருக்கும். அதனால் தான் காபி சுவையாகவும் மனமாகவும் தெரிகிறது வாழ்க்கையிலும் பொறுமையும் நிதானமும் இருந்தால் வாழ்க்கை காப்பி போல சுவையாக இருக்கும்.
விருப்பத்தோடு வாழ்ந்தவர்களை விட விதியென்று வாழ்பவர்களே இந்த உலகில் அதிகம்
இமைகள் திறந்து நேசிப்பதை கவிட இதயம் திறந்து நேசிப்போம் அப்பொழுதுதான் உயிர் பிரிந்தாலும் உறவுகள் நீடிக்கும்.
எதையும் எதிர்பார்க்காமல் இறுதிவரை நீ மட்டும் தான் வேணும் என நினைக்கும் உறவு கிடைத்தால் இழந்து விடக்கூடாது. அப்படிப்பட்ட உறவு கிடைப்பதே ஒரு வாரம் தான்
வாழ்க்கை சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் இருக்க ஆயிரம் உறவுகள் அருகில் இருக்கத் தேவையில்லை.நமக்கு உண்மையாக இருக்கும் ஒரு உறவு இருந்தாலே போதும்.
(கவிஞர் இரா.மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
{{comments.comment}}