தொகுதிகள் சீரமைக்கப்பட்டால்.. தமிழ் கலாச்சாரத்தை பாஜக அழித்து விடும் -ராகுல் காந்தி

Nov 29, 2026,06:37 PM IST

சென்னை: தொகுதி மறுவரையறை தமிழர்களுக்கு எதிரான மிகப் பெரிய சதித் திட்டம். இதை மட்டும் பாஜக சாதித்து விட்டால், தமிழர்கள் மீதும், தமிழ்க் கலாச்சாரம் மீதும், தமிழ்நாட்டின் மீதும் முழு அளவிலான தாக்குதலை ஆர்எஸ்எஸ் மேற்கொள்ளும். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று காங்கிரஸ் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.


திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்புக்குப் பின்னர் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


மு.க. ஸ்டாலின் அவர்களுடன் நாங்கள் மிகவும் இனிமையான, சுமுகமான சந்திப்பை நடத்தினோம். எங்களது கருத்தை அவரிடம் விளக்கினோம். 


எங்களது கருத்து என்னவென்றால், தொகுதி மறுசீரமைப்புடன் கூடிய 850 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தை உருவாக்குவதும், அந்த 850 இடங்களை முழுமையாக வடிவமைக்கவும், இந்தியாவில் உள்ள தொகுதிகளின் தன்மையை மாற்றவும் பாஜகவை அனுமதிப்பதும் இந்திய தேசத்திற்கு மட்டுமல்ல, தென்னிந்தியாவிற்கும் குறிப்பாக தமிழ்நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்... 




தமிழ்நாட்டின் தீவிர பாதுகாவலராக இருக்கும் சகோதரர் ஸ்டாலின் அவர்களிடம், அவர் தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்றும், பாஜகவின் இந்த இழிவான திட்டம் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொண்டோம்... 


850 இடங்களைக் கொண்ட மக்களவையை பாஜக மறுவடிவமைத்துவிட்டால், இந்தியாவில் ஜனநாயகம் முடிவுக்கு வந்துவிடும்.


ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழர் விரோதப் போக்கு கொண்டது. தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரானது. தொகுதிகள் மறு சீரமைக்கப்பப்ட்டு விட்டால் நிச்சயம் தமிழர்கள் மீதான முழு அளவிலான தாக்குதலில் ஆர்எஸ்எஸ் இறங்கும். இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று ராகுல் காந்தி கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொகுதிகள் சீரமைக்கப்பட்டால்.. தமிழ் கலாச்சாரத்தை பாஜக அழித்து விடும் -ராகுல் காந்தி

news

தொகுதி சீரமைப்பு மசோதா: இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கையை நிராகரித்தது திமுக!

news

மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா 2026: ஆதரவு தெரிவிப்பதாக திமுக அறிவிப்பு!

news

"தொகுதி மறுவரையறை மசோதா: திமுகவுக்கு கிடைத்த வெற்றி" - மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி.. திருப்பரங்குன்றம் உச்சி மலைத் தூணில் தீபம் ஏற்றப்பட்டது!

news

“மகளிர் மசோதாவை நிறைவேற்றியே தீருவோம்”: வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி உறுதி

news

முகம் சிவந்து முறுவல் உதிர்த்து முத்தமிட்டு!

news

ஆதவன் – என் வாழ்வில் உதித்த அழகிய சூரியன்.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (19)

news

மைசூர் அரண்மனையிலிருந்து.. வேலூர் கோட்டைக்கு ஷிப்ட் ஆகி வந்த பிசிபேளாபாத்!

அதிகம் பார்க்கும் செய்திகள்