- கவிஞர் மு.ரம்யா ஆனந்த்
ஆதவன் என்றால் கதிரவன்…
அவன் இல்லையென்றால் உலகமே இருள்!
அதுபோலத்தான் என் வாழ்வில்,
நீ இல்லையென்றால் என் உலகமே இருள்!
என் வாழ்வின் முதல் வசந்தம் நீ…
என் கணவருக்கும் எனக்கும் கிடைத்த
முதல் பொக்கிஷம் நீ!
எங்கள் இல்லத்தில் முதன்முதலாய் ஒலித்த
மழலையின் இசையும் நீதான்,
எங்கள் வாழ்க்கைக்கு ஒளி தந்த
அழகிய விடியலும் நீதான்!

என் உடல் தோற்றத்தைக் கண்டு,
என் தாய்மையைப் பற்றிக் கேள்வி எழுப்பி,
குழந்தை பிறக்குமா என்று
என் பின்னாலும், என் முன்னாலும்
பலர் பேசிய வார்த்தைகள் உண்டு!
அந்த வார்த்தைகளுக்கெல்லாம்
இறைவன் அளித்த அழகான பதில்தான் நீ!
இயற்கையாய் முருகன் எனக்குத் தந்த
ஈடு இணையற்ற பரிசு நீ!
உன்னை என் மகன் என்பதால் மட்டும்
புகழ்ந்து சொல்லவில்லை…
உன் முகத்தில் முருகனின் அழகையும்,
உன் செயல்களில் அவனின் அருளையும்
உண்மையாகவே நான் காண்கிறேன்!
பேசும் பேச்சில் தெளிவு,
மேடையில் நிற்கும் துணிவு,
பல திறமைகளில் உனக்குத் தனிச்சிறப்பு,
உன் ஒவ்வொரு முயற்சியிலும்
தெரிகிறது உன் எதிர்காலத்தின் சிறப்பு!
நான்காம் வகுப்பில் படிக்கும்
என் சின்னஞ்சிறு செல்லமே,
உன் திறமைகள் ஒவ்வொன்றும்
என் தாயுள்ளத்தில் பெருமையே!
உனக்கொரு தங்கை வேண்டும் என்று
கோவில் தோறும் வேண்டினாயே…
அவள் வருவதற்கு முன்பே
'தங்க நிலா' என்று பெயர் சூட்டினாயே!
உன் வேண்டுதலுக்குக் கிடைத்த பரிசாய்,
எங்கள் வீட்டில் நிலவாய் வந்தாள்!
நீ சூட்டிய பெயருக்கேற்ப,
எங்கள் இல்லத்தின் தங்க நிலாவாய் மலர்ந்தாள்!
அண்ணன் என்ற உறவுக்கு
அர்த்தம் சொல்ல வந்தவனே,
தங்கையின் வாழ்வில் என்றும்
துணையாய் நிற்க வேண்டியவனே!
என் செல்ல ஆதவனே…
நீ உயர்ந்து படிக்க வேண்டும்,
உனக்குப் பிடித்த கல்வித் துறையைத்
துணிந்து தேர்ந்தெடுக்க வேண்டும்!
பதவியால் உயர்வதைவிட,
பண்பால் உயர வேண்டும்!
பணத்தால் பெரியவனாவதைவிட,
மனிதநேயத்தால் சிறந்தவனாக வேண்டும்!
உலகம் போற்றும் மனிதனாக
நீ வளர வேண்டும் என்பது என் ஆசை!
உன் கனவுகள் அனைத்தும் மலர வேண்டும்,
அதுவே உன் அம்மாவின் தினசரி பிரார்த்தனை!
சூரியன் தினமும் உலகிற்கு ஒளி தருகிறான்…
என் ஆதவனோ என் வாழ்விற்கே ஒளி தருகிறான்!
காலங்கள் மாறலாம், வயதும் கூடலாம்…
ஆனால் உன் மீதான என் அன்பு மட்டும்
என்றென்றும் மாறாது, செல்லமே!
என் வாழ்வின் முதல் வரம் நீ…
என் இதயத்தின் நிரந்தர ஒளி நீ…
என் ஆதவனே, நீ வாழும் காலமெல்லாம்
உன் அம்மாவின் அன்பு உனக்குத் துணை நிற்கும்!
அன்புடன்,
உன் அம்மா…
(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)
ஆதவன் – என் வாழ்வில் உதித்த அழகிய சூரியன்.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (19)
சுற்றுச்சூழல்!
மைசூர் அரண்மனையிலிருந்து.. வேலூர் கோட்டைக்கு ஷிப்ட் ஆகி வந்த பிசிபேளாபாத்!
துணி வளர் திங்கள் துளங்கி விளங்க.. எம்பிரான் திருஞானசம்பந்தர் வரலாறு (3)
“மகளிர் மசோதாவை நிறைவேற்றியே தீருவோம்”: வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி உறுதி
தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு மக்களவைத் தொகுதிகள் 39 லிருந்து 59 ஆக உயரும்
திருப்பரங்குன்றம் மலை ஏற 50 பேருக்கு மட்டுமே அனுமதி; பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு
திருப்பரங்குன்றம் மலைத்தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்: நீதிபதிகள் குழு அறிவிப்பு
சனிக்கிழமை தத்துவம்: புரளி பேசாதே!
{{comments.comment}}