- கவிஞர் மு.ரம்யா ஆனந்த்
கணவன் என்ற உறவாய் வந்தாய்,
என் வாழ்வின் வரமாய் நின்றாய்!
காதல் என்ற சொல்லைத் தாண்டி,
பல உறவுகளாய் என் மனதில் நிறைந்தாய்!
அப்பாவின் அன்பை உன்னிடம் கண்டேன்,
அம்மாவின் அரவணைப்பை உன்னிடம் உணர்ந்தேன்!
அண்ணனின் பாதுகாப்பை உன்னிடம் பெற்றேன்,
தோழனின் நட்பையும் உன்னிடம் கண்டேன்!
என் அப்பாவைப் போலவே என்னைக் காப்பாய்,
என் ஆசைகளுக்கு மதிப்பளித்துத் துணை நிற்பாய்!
என் படிப்பின் மீது அக்கறை கொண்டு,
என் கனவுகளுக்குச் சிறகுகள் தருவாய்!

தேர்வில் தோற்றாலும் துவள விடமாட்டாய்,
வெற்றி பெற்றால் வானளவு பாராட்டுவாய்!
என் திறமையை எனக்கே உணர்த்தி,
என் நம்பிக்கைக்கு உரமாக நிற்பாய்!
உனக்கென்று சொத்து எதுவும் இல்லாமல்,
சொந்த உழைப்பையே துணையாகக் கொண்டு,
உன் குடும்பத்தின் பொறுப்புகளைச் சுமந்து,
உயர்ந்து நிற்கும் உன் மனமே பெரிது!
பெற்றோரைக் காப்பதில் சிறந்த மகனாய்,
மூன்று சகோதரிகளுக்குச் சிறந்த சகோதரனாய்,
உன் பிள்ளைகளுக்கு அன்பான தந்தையாய்,
ஒவ்வொரு உறவிலும் உயர்ந்து நிற்கிறாய்!
சகோதரிகளின் வாழ்வில் மகிழ்ச்சி மலர,
அவர்களின் திருமணப் பொறுப்பை ஏற்று,
உன் உழைப்பால் கடமைகளை நிறைவேற்றி,
உறவுகளின் நம்பிக்கையாக வாழ்கிறாய்!
உன் பெற்றோரின் தேவைகள் கவனிப்பாய்,
உன் உடன்பிறப்புகளின் நலனைக் காப்பாய்!
உன் பிள்ளைகளின் கல்விக்காக உழைப்பாய்,
குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக வாழ்வாய்!
என் மகளை நீ கொஞ்சும் வேளையில்,
என் மனதில் ஆயிரம் பூக்கள் மலர்கின்றன!
அவளின் சின்னச் சின்ன ஆசைகளிலும்,
உன் அன்பின் அழகைக் காண்கின்றேன்!
காதல் மட்டும் திருமணமல்ல,
காலம் முழுவதும் துணையாய் இருப்பதுதான்!
அந்த உண்மையை உன் வாழ்வில் காட்டி,
என் இதயத்தில் இடம்பிடித்தவன் நீ!
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்,
உன் அன்பில் குறைவு கண்டதில்லை!
என் மீது நீ காட்டும் காதலுக்கும்,
அரவணைப்புக்கும் அளவே இல்லை!
முத்துக்குமரனே…
உன் பெயரில் முத்து இருப்பதாலோ,
என் வாழ்வில் ஒளியாய் மின்னுகிறாய்!
என் கண்ணீரைத் துடைக்கும் கரமாகவும்,
என் கனவுகளைத் தாங்கும் தோளாகவும் இருக்கிறாய்!
உன் உழைப்புக்கு உயர்வு கிடைக்கட்டும்,
உன் நேர்மைக்கு வெற்றி கிடைக்கட்டும்!
உன் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கட்டும்,
உன் வாழ்வில் நலமும் வளமும் பெருகட்டும்!
ஆண்டவனிடம் நான் கேட்கும் வரம்,
உன் ஆயுள் முழுவதும் ஆரோக்கியம் வேண்டும்!
உன் முகத்தில் சிரிப்பு என்றும் நிலைக்க,
உன் பாதையில் வெற்றிகள் மலர வேண்டும்!
என் அன்புக் கணவனே…
என் அப்பாவின் அன்பையும்,
என் அம்மாவின் அரவணைப்பையும்,
என் அண்ணனின் பாதுகாப்பையும்,
ஒரே மனிதனாய் எனக்குத் தந்தவன் நீ!
உன்னைப் போன்ற துணை கிடைத்ததற்கு,
இறைவனுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது!
நீ என் கணவன் மட்டுமல்ல…
என் நம்பிக்கை, என் பலம், என் பாதுகாப்பு!
என் கனவுகளின் துணை, என் குழந்தைகளின் உலகம்!
இந்தப் பிறவியில் நான் பெற்ற மிக அழகான வரம் நீதான்!
என் அப்பாவின் அன்பையும்,
என் அண்ணனின் பாதுகாப்பையும்,
ஒரே மனிதனாய் எனக்குத் தந்தவன் நீ!”
(கவிஞர் மு. ரம்யா ஆனந்த், D.T.Ed., M.A., M.Ed. கல்வித் தகுதிகளைப் பெற்றவர். கல்வித்துறையில் ஆர்வம் கொண்டவர். ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருவதுடன், பெண்களின் உணர்வுகள், வாழ்க்கை அனுபவங்கள், தன்னம்பிக்கை மற்றும் மனித உறவுகளை மையமாகக் கொண்டு கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். தனது எழுத்துகளின் மூலம் வாசகர்களின் மனதில் நல்ல சிந்தனைகளையும் நம்பிக்கையையும் விதைப்பதை விரும்புகிறார்)
கணவர் – உறவுகளின் மொத்த உருவம்.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (18)
தூங்கவிடாமல் தொந்தரவு செய்யும் அற்புத எதிரி!
மீண்டும் உயரும் தங்கம் விலை: இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 உயர்வு
விடை தேடும் விடையோன்!
தென்தமிழ் தலையங்கம்: இனியும் விஜய் பொறுக்கக் கூடாது.. இரும்புக் கரத்துடன் கூடிய நடவடிக்கை தேவை!
நடிகர் அர்ஜுன் அளித்த புகார்: பயில்வான் ரங்கநாதனிடம் சைபர் கிரைம் போலீசார் 6 மணி நேரம் விசாரணை!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் : நெல்லையில் நயினார் நாகேந்திரனுக்கு வீட்டு காவல்
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ-வை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
பெண் கலெக்டருக்கு எஸ்எம்எஸ் : தவெக எம்எல்ஏ மீது கடும் நடவடிக்கை எடுக்க மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்
{{comments.comment}}