துணி வளர் திங்கள் துளங்கி விளங்க.. எம்பிரான் திருஞானசம்பந்தர் வரலாறு (3)

Nov 28, 2026,03:52 PM IST

- கலைவாணி கோபால்


திருநெல்வாயில் அறத்துறையில் சிலநாட்கள் தங்கி இருந்து புறப்பட்ட சம்பந்தர். விஜயமங்கை, திருவைகா, புறம்பை, சேய்ஞலூர், திருப்பனந்தாள், பந்தனை நல்லூர், ஓமாம் புலியூர்,  கடம்பூர் ,நாரையூர் கருப்பறியலூர், முதலிய தலங்களை பணிந்து திரு பிரமபுரம் மீண்டருளினார்.


இது நான்காவது தல யாத்திரை ஆகும் . அப்போது, அவருக்கு அகவை 7 ஆக இருந்தது . அதனால் அந்தணர் மரபுப்படி உபநயனம் பெரும் வயதாக அது கருதப்பட்டது.  எவ்வளவோ? விவாதங்கள் அவரிடம் நடந்த போதும் பஞ்சாட்சர மந்திரம் தான் மந்திரங்களிலே முதன்மையானது. என்று அவரால் எடுத்துரைக்கப்பட்டது. பிராமணனுக்கு இரு பிறப்பு உண்டு உபநயமானவனை துவிஜன் அதாவது இரு பிறப்பாளன் என்பர்.


தாயிடமிருந்து வெளியானது முதல் பிறப்பு .உபநயமானது தெய்வீக பிறப்பு இது சம்பந்தருக்கு மாசி மாதம் ஒரு நாள் குறிப்பிட்டு  நாளில் முப்புரி நூல்  வைபவம் அவருடைய ஏழாவது அகவையில் நடைபெற்றது. அவர் தாயிடம் இருந்து அவருடைய முதல் பிட்சையை வாங்கிக் கொண்டார். அந்தண தர்மப்படி பிள்ளை இனி வேதங்களை காக்கும் வாழ்வுக்கு வந்துவிட்டார். அன்று ,சீர்காழி மிகப்பெரிய கொண்டாட்டத்தில் இருந்தது .பல திசைகளில் இருந்து சிவாச்சாரியார்களும்,அடியார்களும், வந்து ஞானக்குழந்தையினை வாழ்த்தி வணங்கினர். சீர்காழியில் பிள்ளை தங்கி இருக்கும் போது தான் ,அவரை சந்திக்க திருநாவுக்கரசர் ஓடோடி வந்தார்.




திருநாவுக்கரசர் தொண்டை நாட்டில் சமணத்தில் இருந்து சைவத்துக்கு வந்து பொல்லா சமணர்களால் பெரும்பாடுகளை பட்டு சிவனால் உயிர் தப்பி.... அப்படியே, பல்லவ மன்னனையும், சைவனாக்கிய கதை எல்லாம் அறிந்த ஞானசம்பந்த பிள்ளை சீர்காழி எல்லையில் நாவுக்கரச பெருமானை எதிர்கொண்டு அழைத்தார்.


சம்பந்தர், அப்பரே! என அழைக்க .…. அந்த வார்த்தையால் திருநாவுக்கரசர் ஆனந்தத்தில் சம்பந்தரை ஆரத் தழுவி ஆசி வழங்கினார். ஒரு உயர்ந்த தென்னை மரம் குனிந்து ஒரு தென்னம்பிள்ளயை வாழ்த்துவது போல அந்தகாட்சி இருந்தது .சீர்காழி தோணியப்பரை இருவருமாக வணங்கி சிவனை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்தனர்.


சில நாட்கள் ஞானசம்பந்தருடன் தங்கி இருந்த அப்பர் .பின்பு, சோழ நாட்டு திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கண்டார். உபநயனம் பெற்ற சம்பந்தபிள்ளையும், திருப்பயணத்தை தொடர ஆரம்பித்தார். அவரை பிரிய முடியாத  இருதயரும் அவருடனே யாத்திரை கிளம்பினார். திருஞானசம்பந்தருடன் ,எப்போதும் இருக்கும் திருநீலகண்ட யாழ்ப்பாண தம்பதிகளும் மற்றும் ,பலரும் அவருடனே திருத்தலங்களுக்கு புறப்பட்டனர்.


அப்படி புறப்பட்டு... அவர்கள் அடைந்த இடம் கொல்லிமழவன் என்னும் குறுநில மன்னர் ஆண்டு கொண்டு இருந்த திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் ஊரின் ஆலயத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது அங்கு ஒரு பெரும் சோகம் நிலவியது. கொல்லிமழவனின் மகள் 'முயலகன்' எனும் கொடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாள் அது வலிப்பு நோயுடன் கூடிய வயிற்று வலி ஆகும். சம்பந்தப் பெருமான் வருவதை அறிந்த மன்னன் தன் பெண்ணை இவரால் குணப்படுத்த முடியும் என நினைத்து  சம்பந்தர் பெருமான் வரும் ஆலயத்திற்கு தன் மகளையும் கொண்டு வந்து படுக்க செய்துவிட்டு  சம்மந்தரை  எதிர்கொண்டு அழைத்து தன் நிலைமையினை சொல்லிக் கலங்கினார் 


சம்பந்தர் பெருமானும் வரதீசுவரரை நினைத்து துணி வளர் திங்கள் துளங்கி விளங்க என்னும் பதிகத்தை பாடி அப்பன் இருக்கும் நீர் கொடுத்து திருநீறு அணிவித்தார் பெண்ணும் முழுமையாக குணமாகி புன்னகைத்தார். 


பின் திருப்பாச்சிலாசிரமத்தில் உள்ள பரமனை பணிந்து நன்றி தெரிவித்து கொங்கு நாடு நோக்கி பைஞ்ஞீலி, ஈங்கோய்மலை முதலிய தலங்களை வணங்கி செங்குன்றூரில் அர்த்தநாரீஸ்வரரை மனமார வணங்கி பாடினார்.


அங்கிருந்து கிளம்பி திருநணாவை வழிபட்டு செல்லும் போது தன் குழுவினரும், பல்லக்கு தூக்குபவர்கள் என எல்லோரும் காய்ச்சல் ,நோய் வாய்ப்பட்டு அவதிப்பட்டார்கள். இதை,  அறிந்த சம்மந்தர் அந்நோய் தீருமாறு' நஞ்சுண்ட காத்த  பெருமானை' நோக்கி "அவ்வினைக்கு இவ்வினையாம்" என்னும் பதிகத்தை பாட அனைவரும் காய்ச்சல் நீங்கி கொங்கு நாட்டில் உள்ள சைவ திருத்தலங்களுக்கு சம்பந்தரை அழைத்துச் செல்ல தொடங்கினர்.


(தொடரும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சுற்றுச்சூழல்!

news

ஆதவன் – என் வாழ்வில் உதித்த அழகிய சூரியன்.. ரம்யாவின் கவிதைத் தோட்டம் (19)

news

மைசூர் அரண்மனையிலிருந்து.. வேலூர் கோட்டைக்கு ஷிப்ட் ஆகி வந்த பிசிபேளாபாத்!

news

துணி வளர் திங்கள் துளங்கி விளங்க.. எம்பிரான் திருஞானசம்பந்தர் வரலாறு (3)

news

“மகளிர் மசோதாவை நிறைவேற்றியே தீருவோம்”: வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி உறுதி

news

தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு மக்களவைத் தொகுதிகள் 39 லிருந்து 59 ஆக உயரும்

news

திருப்பரங்குன்றம் மலை ஏற 50 பேருக்கு மட்டுமே அனுமதி; பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு

news

திருப்பரங்குன்றம் மலைத்தூணில் இன்று மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்: நீதிபதிகள் குழு அறிவிப்பு

news

சனிக்கிழமை தத்துவம்: புரளி பேசாதே!

அதிகம் பார்க்கும் செய்திகள்