கற்றாங்கு ஏறி ஓம்பி கலியை வாராமே.. எம்பிரான் திருஞானசம்பந்தர் வரலாறு (பகுதி 2)

Nov 20, 2026,05:45 PM IST

- கலைவாணி கோபால்


பொற்றாள நாதரிடம் இருந்து பொற்றாலத்தை பெற்ற ஞானசம்பந்தரின் முதல் யாத்திரை சிறப்பாக முடிவுற்று, திரும்பி சீர்காழிக்கு வந்து "பூவார் கொன்றை" என்னும் பதிகத்தை பாடி தன் இல்லம் திரும்பினார்.


ஞானசம்பந்தரின் அன்னை வழி உறவினர்கள் திருநனி பள்ளிக்கு ஞானசம்பந்தரை அழைத்தனர் . ஏனென்றால் ....ஒரு காலத்தில் சொர்க்கம் என்று சொல்லப்பட்டு விளைந்த பூமியாக இருந்த அந்த ஊர் சிவனடியாரின் சாபத்தால் பாலைவனமாக மாறியது.


அதனால், சிவனடியாரால் மாறிய பூமி வேறு ஒரு சிவனடியாரால் அந்த  ஊரின் பூமிக்கு தீர்வு கிடைக்கும் என நம்பி ஞானசம்பந்தரை அழைத்தனர். அதேபோல், ஞானசம்பந்தர் "காரைகள் கூகை முல்லை களவாகை ஈகை படர்தொடரி"  என்னும் பதிகத்தை பாடியதும்,... அந்த பூமி சாபம் நீங்கி சிவன் அருள் பெற்றது. பின், அது பசுமை நிறைந்த பூமியாக மாற ஆரம்பித்தது.


தொடர்ந்து, சைவ ஆலயங்களில் இருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இருப்பினும் திருநனிப்பள்ளி சிவனிடம் விடைபெற்று.... திருசாய்க்காடு, திருவெண்காடு, திருவலம்புரம், தென்திரு முல்லைவாயில்  திருமகேந்திரப்பள்ளி திருகொடுக்காடு ,ஆகிய இடங்களில் தன்னுடைய இரண்டாம் யாத்திரை முடித்தார்.


சம்மந்த பிள்ளைக்கு ஆலயங்களை தரிசித்து பாட ஆவல் இருந்தால் அடுத்தடுத்த யாத்திரைக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டார் . அடுத்து தனது மூன்றாம் யாத்திரையை திருக்குறுகாவூர், திருமுல்லைவாயில், முதலிய தலங்களைச் சென்று வணங்கி பாடினார். சம்பந்தரின் சிறப்பு அறிந்து திரு நீலகண்ட யாழ்ப்பாணர் அவரது மனைவி மதங்க சூளாமணி அம்மையாரும், ஞானசம்பந்தருடனே தனது பயணங்களை மேற்கொண்டனர்.


நீலகண்ட யாழ்ப்பாணர் யாழ் இசைக்க சூளாமணி அம்மையாரும் சம்பந்தப் பிள்ளைக்கு பண் அமைத்து தருவது என அவர்களும் சம்பந்தருடன் பயணிக்க ஆரம்பித்தனர். அக்காலங்களில் கற்றோரும், சான்றோர்களும், அந்தணர்களும் பாணர்களை மதித்துக் கூட பேச மாட்டார்கள் .ஆனால்  சமந்தர் என்னும் சிறு குழந்தை அவர்களை தன்னுடனே வைத்து சிவனை வணங்குபவர்கள் சிவனுக்கு சமம். என்று ஜாதி, மதங்களை கடந்து பெண்களும் சிவனை வணங்குவதில் பேதம் இல்லை ஜாதியும் ,சிவனை வணங்குவதில் முக்கியமில்லை என உலகிற்கு உணர்த்தியவர்.


அந்த நீலகண்ட யாழ்பாணர் தம்பதியினரை தயக்கம் இன்றி தன் பாடலுக்கு இசை அமைக்கவும், பண் அமைக்கவும், சிவனடியார் என்னும் வகையில் தன்னோடு வைத்துக் கொண்டார். சம்பந்தரின் ஒரு பாடலுக்காவது இசைக்க வேண்டும் என்ற தன்னுடைய ஆசை இன்று சம்மந்தரின் ஆஸ்தான கலைஞராகவே யாழ்ப்பாணாரை அமரச் செய்தது சிவபெருமானின் பெரும் கருணையால்.....




யாழ்பாணருடன் சேர்ந்து சம்பந்தரின் சைவ கூட்டம் மிகவும் பெரியதாயிற்று.  சிதம்பரத்தை அடைந்த சம்மந்தர் தன்னுடைய குழுவினரோடு நடராஜ பெருமானை வணங்கி "கற்றாங்கு ஏறி ஓம்பி கலியை வாராமே" எனும் பதிகத்தை பாணர் யாழ்  இசைக்க சம்மந்தர் பாடினார்.


சிதம்பரத்திலிருந்து விடைபெற்ற சம்பந்தரும், அவரின் குழுவினரும், திருவேட்களம் சென்று தங்கினர். பின்பு திருக்கழிப்பாலை வந்து அங்குள்ள பெருமானை வழிபட்டு யாழ்ப்பாணரின் சொந்த ஊரான எருதக்கம் புலியூருக்கு பாணரின் அழைப்பை ஏற்று சம்மந்தர் அங்கு வந்தார் .அவரை கண்டதும் கைலாயமே வந்ததைப் போல பாணரும் அவரை சுற்றி இருந்த ஊர் மக்களும் மிகவும் மகிழ்ச்சியில் கொண்டாடினர்.


பின் , திருநெல்வாயில் சென்று  திருவரத்துறை, திருமுதுகுன்றம், திரு  பெண்ணாடம்,ஆகிய ஊர்களின் சிவனை மனமார தரிசித்து பின் மாறன்பாடியில் தங்கினார். அப்போது, சம்பந்தருக்கு ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும். நடந்த கால்கள் வீங்கி இருந்தன அந்த பிஞ்சு கால்களுக்கு மிகுந்த வலி இருந்ததை அறிந்த பெருமான் .....திரு நெல்வாயில் அறத்துரை ஆலய அந்தணர்கள் கனவில் சென்று தன் அன்புக்குரிய ஞானசம்பந்தன் வரும்போது, அவனுக்கு முத்துசிவிகை, பல்லக்கு, முத்துக்குடை, காற்று வீசும் கவரி எல்லாம் வழங்க உத்தரவிட்டார்.


மாறன் பாடியில் தங்கி இருந்த சம்மந்தர் கனவிலும் சிவன் அவற்றைப் பெற்றுக் கொள்ள அவருக்கு உத்தரவிட்டார். சான்றோர்களுக்கும், மடாதிபதிகளுக்கும் அடையாளமாக கருதப்படும் இவை சிறு குழந்தையான ஞானசம்பந்த பெருமானுக்கு கொடுக்க செய்தது சிவனின் பெருங்கருணை ஆகும்.


ஆனால் , துயிலில் இருந்து அந்தணர்கள் திகைத்தனர் காரணம் அவர்களிடம் முத்து பல்லக்கு இல்லை. என்ன செய்வது? என திகைத்த நேரத்தில் திருக்காப்பினை விலக்கி கதவினை திறந்தால்! ஆலயத்தில் அழகான முத்து பல்லக்கு எனும் சிவிகை வெண்குடை, வெண்சாமரம், எல்லாம் இருந்தது. ஆச்சரியத்தில் அந்தணர்கள் உறைந்தனர். அதை சுமந்து கொண்டு சம்பந்தரை எதிர்கொண்டு அழைத்தனர்.


சம்பந்தப் பிள்ளையும் அதன் மேல் அமர்ந்து "எந்தை யீச னெம்பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்" என்னும் பதிகத்தை மனமார பாடி திருவரத்துறை பெருமானை வணங்கினார்.


(தொடரும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்