கரூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் பங்கேற்கும் 'கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி' நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கான பிரம்மாண்ட உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகின்றன. 10 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள விழா மைதானத்தில் பொதுமக்களுக்கும் தொண்டர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளும் அதிநவீன முறையில் திட்டமிடப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் விஜய் நாளை காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு கரூர் செல்ல உள்ளார். அங்கு, கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து, அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க உள்ளதாகவும், மேலும் கரூரில் மக்கள் நல திட்டங்கள் சிலவற்றை துவக்கி வைக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
சுமார் 10 ஏக்கர் பரப்பளவிலான பிரம்மாண்ட மைதானத்தில் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் 10,000 பேர் வரை அமரக்கூடிய அளவிற்குப் பரந்த இடவசதி இருந்த போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டும் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் எவ்வித சிரமமுமின்றி அமர்ந்து நிகழ்வைக் காணும் வகையில் 40 அடி நீளமும் 60 அடி அகலமும் கொண்ட 16 தனித்தனி பெட்டிகள் (Enclosures) பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு பெட்டியிலும் தலா 315 நபர்கள் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மேலும், வெப்பத்தின் தாக்கத்தைக் குறைப்பதற்காக ஒவ்வொரு தனிப் பெட்டியிலும் மின்விசிறி (Fan) வசதிகளும் தடையின்றிச் செய்யப்பட்டுள்ளன.

நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தில் மேடைக்கு வலது புறத்தில் பொதுமக்கள் வரிசையாகவும், ஒழுங்காகவும் உள்ளே நுழையும் வகையில் 'ஒரு வழிப் பாதை' (One-way) அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேடைக்கு அருகே இடது புறத்தில் முதலமைச்சர் விஜய், விழா மேடைக்கு வருவதற்கான பிரத்யேக தனிவழிப் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச் சுவரில் இருந்து உள்ளே வருவதற்கு ஒரு வழி அமைக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளே வந்த பிறகு மேடைக்கு அருகே தொண்டர்களும் பொதுமக்களும் வந்து செல்லும் வகையில் முதல் அடுக்கு தடுப்பில் இரண்டு வழிப் பாதைகள் சிறப்பான முறையில் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சுற்றிலும் இரண்டு அடுக்கிலான பலத்த பாதுகாப்புத் தடுப்புகள் (Two-tier barricading) அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நிகழ்விடத்திற்கு அருகில் மின்மாற்றிகள் (Transformers) மற்றும் மின் கம்பங்கள் இருப்பதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு அவற்றின் மீது பொதுமக்கள் அல்லது தொண்டர்கள் யாரும் ஏறாத வண்ணம் பிரத்யேக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் மக்களின் தாகத்தைத் தீர்க்கும் பொருட்டு, சுமார் 20,000 பேருக்குத் தலா 1 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் பாட்டில்கள் தாராளமாக வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை காலை 8 மணி முதலே நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கான அனுமதி தொடங்குகிறது. பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் உரிய சோதனைக்குப் பிறகே மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவர். இதனைத் தொடர்ந்து, காலை 11 மணிக்குத் முதல்வர் விஜய் முன்னிலையில் இந்த பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி அதிகாரப்பூர்வமாகத் தொடங்க உள்ளது.
CM VIjay to visit Karur: முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்: செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன?
ஜூலை 15ல் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு
கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை: இந்திய கம்யூனிஸ்ட் பரபரப்பு குற்றச்சாட்டு!
"எம்எல்ஏ.,க்களை வாங்குவதில் மட்டும் கவனம்..." அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல்!
ரூ.2000 நோட்டுக்கள் வைத்திருந்தால் மாற்றிக் கொள்ளலாம் : ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு
அமெரிக்க தாக்குதலுக்கு ஈரான் அதிரடி பதிலடி: அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல்!
ADMK Ex MLAs: ராஜினாமா ஏன்? சபாநாயகரிடம் 3 முன்னாள் எம்எல்ஏ.,க்கள் நேரில் விளக்கம்
மகளிர் விடியல் பயணம் திட்டம் பெயர் மாற்றம்...அரசு பஸ்களில் விடியல் நீக்கம்
அமைச்சர் மரியா வில்சன் புதுச்சேரி கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு
{{comments.comment}}