சென்னை: அதிமுகவிலிருந்து விலகிய 3 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்.எல்.ஏக்கள்), இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளனர். இந்த அதிரடி சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும், பல்வேறு விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
அதிமுகவின் முக்கிய முகங்களாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏக்களான பெருந்துறை ஜெயக்குமார், சத்தியபாமா மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு அதிமுக கட்சியில் இருந்து விலகி, உடனடியாக தவெக.,வில் சென்று இணைந்ததை அடுத்து, அது தொடர்பான சட்டப்பூர்வ மற்றும் அரசியல் விளக்கங்கள் கோரப்பட்டிருந்தன. இதற்கு முன்னதாக, அவர்கள் மூவரும் தங்களது விளக்கங்களை கடிதம் வாயிலாக சபாநாயகருக்கு அனுப்பி வைத்திருந்தனர்.
இருப்பினும், கடிதம் மூலம் அவர்கள் அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை என்று சபாநாயகர் தரப்பில் கருதப்பட்டது. தெளிவான மற்றும் விரிவான விபரங்களை நேரடியாகப் பெற வேண்டும் என்ற அடிப்படையில், அவர்கள் மூவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

சபாநாயகரின் அழைப்பை ஏற்று, இன்று (09.07.2026) முன்னாள் எம்.எல்.ஏக்கள் பெருந்துறை ஜெயக்குமார், சத்தியபாமா, மரகதம் குமரவேல் ஆகிய மூவரும் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தனர். அங்கு சபாநாயகரை அவரது அறையில் நேரில் சந்தித்து தங்களது விளக்கங்களை முன்வைத்தனர்.
இந்த சந்திப்பின் போது ஒரு முக்கிய திருப்பமாக, சபாநாயகர் தரப்பிலிருந்து எழுத்துப்பூர்வமாக சில கேள்விகள் அவர்களிடம் முன்வைக்கப்பட்டன. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, முன்னாள் எம்.எல்.ஏக்கள் மூவரும் தனித்தனியாக, சபாநாயகரின் கேள்விகளுக்கு தங்களது சொந்தக் கைப்பட எழுதி விரிவான விளக்கமளித்தனர். இந்த எழுத்துப்பூர்வமான விளக்க அறிக்கைகள் அனைத்தும் சபாநாயகரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அதிமுகவில் நிலவி வரும் தொடர் அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், இந்த 3 முன்னாள் எம்.எல்.ஏக்களின் சபாநாயகருடனான நேரடியான சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இவர்கள் 3 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என ஏற்கனவே அதிமுக தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களின் கைப்பட எழுதப்பட்ட விளக்கங்களை ஆய்வு செய்த பிறகு சபாநாயகர் அடுத்தகட்டமாக என்ன மாதிரியான சட்டப்பூர்வ முடிவை எடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் தற்போது அதிகரித்துள்ளது.
உதவியை உயர்ந்தவர்களுக்கு செய்வதை விட ஒருவரை உயர்த்துவதற்காக செய்!
"அன்னை மொழி அதுவே நம் விழி"
Motivational Short Story: சிற்றுயிர்களின் விழிப்புணர்வு மாநாடு
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது.. முதல்வர் விஜய் சட்டசபையில் அறிவிப்பு
Short Story: ருத்ர தாண்டவம்!
பாஜகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைகிறார் நடிகர் தேவன்: பரபரப்பு பேட்டி!
70 வயதிற்கு மேற்பட்ட நிர்வாகிகளுக்கு பதவி கிடையாது: திமுக தலைமை அதிரடி
Short Story: "யாரும்மா அது? ஞாயிற்றுக்கிழமைல!
சிந்தனைச் சிதறல்.. நமக்கு மறுக்கப்பட்டது.. அவர்களுக்கு வழங்கப்படுகிறது!
{{comments.comment}}