கரிசல் மண்ணின் மைந்தன்.. எளிய மக்களின் எழுத்தாளர் பூமணி காலமானார்

Jul 13, 2026,05:24 PM IST

சென்னை: எழுத்தாளர் பூமணி காலமானார். தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கியமான, யதார்த்தவாத எழுத்தாளர்களுள் ஒருவர். கரிசல் மண்ணின் மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் எளிய வாழ்வியலையும் எவ்வித ஒப்பனைகளும் இன்றி மிகத் துல்லியமாகத் தன் படைப்புகளில் பதிவு செய்தவர் எழுத்தாளர் பூமணி.


பூ. மாணிக்கவாசகம் என்ற பெயர் கொண்டவரை, இலக்கிய உலகம் இவரை 'பூமணி' என்றே கொண்டாடுகிறது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள ஆண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.


பூமணியின் கதைகள் பெரும்பாலும் கோவில்பட்டி, தூத்துக்குடி உள்ளிட்ட கரிசல் நிலப்பகுதியை மையமாகக் கொண்டவை. கி. ராஜநாராயணனுக்குப் பிறகு கரிசல் இலக்கியத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தியவர்களில் இவருக்கு மிக முக்கியப் பங்குண்டு.


வட்டார வழக்குச் சொற்கள், அடித்தட்டு மக்களின் உழைப்பு, சாதிய ஒடுக்குமுறைகள், குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் சிக்கல்கள் மற்றும் கிராமத்து மனிதர்களின் அசாத்தியமான வாழ்வாதாரப் போராட்டங்களை இவர் தனது எழுத்தில் கொண்டு வந்தார்.




இவரது படைப்புகளில் வெக்கை மிகச் சிறந்தது. 1989ம் ஆண்டு எழுதிய வெக்கை, பூமணியின் ஆகச்சிறந்த நாவல்களுள் ஒன்று. நிலப் பறிப்பு, சாதிய ஆதிக்கம் மற்றும் அதற்கு எதிரான ஒரு பதின்பருவச் சிறுவனின் பழிவாங்குதலைப் பேசும் நாவல். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் இந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவானதே.


அஞ்ஞாடி என்ற நாவல், 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகத்தில் (குறிப்பாக தென் மாவட்டங்களில்) நிகழ்ந்த சமூக மாற்றங்கள், சாதிக்கலவரங்கள், பஞ்சம் ஆகியவற்றை விவரிக்கும் ஒரு பிரம்மாண்டமான வரலாற்று ஆவணம் போன்ற நாவல்.


பிறகு, நெடுங்காலம், வரப்புகள், வாய்க்கால் போன்ற நாவல்களையும், வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.


2014ம் ஆண்டு அவரது திருப்புமுனை நாவலான அஞ்ஞாடி காவியத்திற்காக இந்திய அரசின் மிக உயரிய இலக்கிய விருதான சாகித்திய அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. இதுதவிர பல்வேறு விருதுகளையும், கெளரவங்களையும் அவர் பெற்றுள்ளார்.


எழுத்தாளராக மட்டுமன்றி, பூமணி திரைப்படத் துறையிலும் தடம் பதித்துள்ளார். 1999-இல் தலித் மக்களின் வாழ்வியலையும், விளிம்புநிலை மக்களின் அரசியலையும் பேசிய கருவேலம் பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் (NFDC) தயாரிப்பில் உருவானது குறிப்பிடத்தக்கது.


எழுத்தாளர் பூமணி குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் விஜய், அவரது இறுதிச் சடங்குகளை முழு அரசு மரியாதைகளுடன் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அரசு மருத்துவமனைகளில் பார்வையாளர்களுக்கு இனி நேரக் கட்டுப்பாடு கட்டாயம் - அமைச்சர் அருண்ராஜ்

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

news

Short story: "அண்ணிகிட்ட சொல்லிடாதே .. கண்ணு"

news

சிவனும் விஷ்ணுவும் சேர்ந்த மாஸான கோவில்.. சங்கரன்கோவில் சங்கரநாராயணன் திருக்கோவில்!

news

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026...வேட்புமனு தாக்கல் துவங்கியது...யாருக்கு வெற்றி?

news

இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!

news

தொடுதிரையில் தொலைந்த நட்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்