-எம்.கே.திருப்பதி, திருப்பூர்
இசைத்தூளி
இறந்து விட்டதா?
தென்னக நைட்டிங்கேல்
தென்புலம் சென்றதா?
அறுபது ஆண்டுகள்
ஆராட்டிய நீ
இன்று மட்டும்
ஏன் எங்களை
அரற்றிச் சென்றாய்?
செந்தூரப்பூவே நீ
நெடுந்தூரம் சென்றாயோ!
பொத்தி வச்ச
மல்லிகை மொட்டு
நெஞ்சில்
குத்திவிட்டதே!

தென்றலாய் வந்து
தீண்டிய நீ
கொண்டலோடு
கலந்து விட்டாயே!
கண்ணே கலைமானே
நீ
சங்கீத சிலைதானே!
உன் கீதம் கேட்காமல்
என் தேகம் தூங்காது
எது உன்
மூச்சை நிறுத்தியது?
முதுமையா
அல்ல
கொடிய நோயா
அல்ல
உன் கொடுப்பினையா...?
நீ
பூமித் தாயை
புகழ்ந்தது போதுமென
உன் இசைத்தாய்
உன்னை உம்பருலகுக்கு
கடத்திச் சென்றாளோ!
இல்லை..
நீதான் என்
இசை மகளென
இசைந்து உனை
அழைத்துச் சென்றாளோ!
நேர்ந்தது எதுவாயினும்
சோர்ந்தது யாம்!
குண்டூரில் மலர்ந்த நீ
மைசூரில் மறைந்திருக்கிறாய்!
இன்றும் என்றும்
குண்டூர் காரம்போல்
உன் சுவை இருக்கும்
மைசூர் சந்தனம் போல்
உன் வாசம் மணக்கும்!
இசை வானுக்கு
இந்த
இசைப் பித்தனின்
இறுதி வணக்கம்!
(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி. 98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
{{comments.comment}}