World Earth Day: உயிர்க்கோளம் பூமி .. இறைவன் நமக்கு கொடுத்த வரம்!

Apr 22, 2026,03:03 PM IST

- கவிஞர் க. முருகேஸ்வரி


உலக பூமி தினம் _ஏப்ரல் 22


உயிர்கள் வாழும் தகுதி உடைய ஒரே கோள் பூமி. எனவே பூமியை உயிர்க்கோளம் என்கிறோம். இது இயற்கை நமக்கு அளித்த கொடை.


இறைவன் நமக்கு கொடுத்த வரம்.


தேவையான காற்று, நீர், தேவையான வெப்பம் இவை அனைத்தும் உள்ள ஒரே ஒரு கோள் பூமி என்பதால் ....பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ முடியும். 


இத்தகைய சிறப்பு வாய்ந்த பூமியில் வாழும் மனிதர்கள் பூமியை தவிர வேறு எங்கும் நம்மால் வாழ முடியாது என்று தெரிந்தும் அதை பாதுகாக்க தவறி இருக்கிறோம். 




ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் ஒரு பாடம் உண்டு .பூமி ஒரு பாழடைந்த வீடு.


மனிதர்களின் அஜாக்கிரதையான நடவடிக்கைகளால் பூமி வாழத் தகுதியற்ற கோளாக மாறிய பின்பு பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் குடியேறுவதைப் போன்றதொரு பாடம்.


எந்நேரமும் மனிதர்கள் விண்வெளி உடையை அணிந்து கொண்டிருக்க வேண்டும். கேப்சூஸில் படுத்து உறங்க வேண்டும் உணவுக்கு பதில் மாத்திரை விழுங்க வேண்டும் .


காய்கறிகளை சோதனை கூடத்தில் விளைவிக்க வேண்டும். நீரை மழையிலிருந்து பெறாமல் வேதியல் கூடத்தில் உருவாக்க வேண்டும். 


ஆக்சிஜன் உருளையை சுமந்து கொண்டே திரிய வேண்டும். 


இது போன்ற விஷயங்களை எல்லாம் அந்த பாடத்தில் அழகாக கூறி இருப்பார்கள். இது கற்பனையாகத் தோன்றலாம் ..


ஆனால் நாம் இன்னும் பூமியைப் பாதுகாக்க தவறுமேயானால் இந்த நிலைக்கும் தள்ளப்படலாம். முதலாவதாக நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கை நெகிழிப் பயன்பாட்டை குறைப்பது...


குறைத்து குறைத்து கொஞ்சம் கொஞ்சமாக அறவே தவிர்ப்பது .இது மிகத் துரிதமான நடவடிக்கையாக இருக்க வேண்டும்.


இரண்டாவதாக மரங்களை வெட்டுவதற்கு பதில் நட்டு வளர்க்க வேண்டும்.


மிதிவண்டி போன்ற (Eco friendly) வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும்..


அருகில் இருக்கும் இடத்திற்கு செல்வதற்கு மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தாமல் நடந்து சென்று பழக வேண்டும்...


இல்லையெனில் மிதிவண்டியில் செல்ல வேண்டும். 


பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு செல்லும் போது மஞ்சள் பை ...துணிப்பை எடுத்துச் சென்று பழக வேண்டும்...


நாம் அனுபவித்து வாழ்ந்த பூமியில் நம் சந்ததியினரும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டுமேயானால் இதையெல்லாம் பின்பற்றித் தான் ஆக வேண்டும்.


நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும்.. நீர்நிலைகளில் குப்பைகளைக் கொட்ட கூடாது. பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துக் கூடாது. இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும்...


நீர் நிலம் காற்று மூன்று மாசுபாட்டையும் குறைக்கும் வழிகளைத் தெரிந்து அதன்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இளைய தலைமுறைக்கும் அதைக் கற்றுக் கொடுக்க வேண்டும். 




உலக பூமி தினத்தில் கட்டாயம் நாம் இந்த ஒரு உறுதிமொழியை எடுத்துத் தான் ஆக வேண்டும். 


எனது பூமியைக் காப்பதில் என் பங்கு மிகவும் முக்கியமானது. 


ஒவ்வொருவரும் இந்த நன்னாளில் ஒரு மரக்கன்றுகளை வாங்கி நடலாம். 


மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் ..


பூமி செழிக்கட்டும் பல்லுயிர்களும் பயமில்லாமல் வாழட்டும். பசுமை கொழிக்கட்டும். இனி வரும் தலைமுறையும் இந்த பூமியின் இயற்கை வளங்களை அனுபவித்து ரசிக்கட்டும்.


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்