- ஸ்வர்ணலட்சுமி
2026 ஆம் ஆண்டின் உலக பூமி தினம் ஏப்ரல் 22 புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது. 1970 இல் உலக பூமி தினம் தொடங்கப்பட்டது. இந்த நாள் ஆரோக்கியமான சூழலுக்கான நமது தார்மீக உரிமையை நினைவூட்டுகிறது. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், நிலையான எதிர்காலத்தை உருவாக்கவும், தனி நபர்கள் மற்றும் சமூகங்களை இந்த நாள் ஊக்குவிக்கிறது.
உலக பூமி தின வரலாறு :
உலக பூமி தினத்தின் வரலாறு 1970 ஆம் ஆண்டு தொடங்கியது. கலிபோர்னியாவின் சாண்டா பார்ப்பாராவில் ஏற்பட்ட ஒரு மாபெரும் எண்ணெய் கசிவின் பேரழிவு கரமான விளைவுகளை கண்ட பிறகு, அமெரிக்க செனட்டர் கே லார்ட் நெல்சன் என்பவர் பூமி தினத்தை நிறுவினார். 1969 ஆம் ஆண்டு யுனெஸ்கோ மாநாட்டில் ஜான் மெக்கானல் (அமைதி ஆர்வலர் )புவி தினத்தை கொண்டாடும் யோசனையை முன் வைத்தார். அதன் பின்னர் சர்வதேச புவி தினம் 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும் செயற்பாட்டாளர் டெனிஸ் ஹேய் ஸ் முதல் பூமி தின நிகழ்வை ஏற்பாடு செய்தார். பிறகு 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி சுமார் 2 கோடி அமெரிக்கர்கள் தூய்மையான காற்று, தூய்மையான நீர் மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழலை கோரி பூங்காக்களிலும், அரங்கங்களிலும், தெருக்களிலும் திரண்டனர். 1990 இல் டெனிஸ் ஹேய்ஸ் 141 நாடுகளில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த போது புவி தினம் உலகளாவியதாக மாறியது.
உலக பூமி தினம் 20 26 கருப்பொருள்:

இந்த ஆண்டு உலக புவி தினத்தின் கருப்பொருள் "Our Power, OurPlanet "நமது சக்தி, நமது கோளம் "என்பது ஆகும். நமது கோளத்தை காப்பாற்றும் சக்தி மக்களிடமே உள்ளது என்பதை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது. இந்தக் கருப்பொருள் 20 30 ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் உலகளாவிய உற்பத்தியை மும்மடங்கு ஆக்குமாறு தனி நபர்கள், சமூகங்கள் மற்றும் அரசாங்கங்களை வலியுறுத்துகிறது.
முக்கியத்துவம்:
இன்றைய காலங்களில் உலக பூமி தினம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பூமி மிகுந்த சுற்றுச்சூழல் நெருக்கடியை எதிர்கொள்கிறது. அதிகரித்து வரும் உலக வெப்பநிலை,பருவநிலை மாற்றம்,உருகும் பனிப்பாறைகள், தீவிர வானிலை நிகழ்வுகள், தண்ணீர் பற்றாக்குறை,காற்று மாசுபாடு,நெகிழி மாசுபாடு,மழையின்மை ஆகியவை பூமியில் உள்ள உயிர்களின் அடித்தளத்தையே அச்சுறுத்துகின்றன.உலக பூமி தினம் இந்த அவசர பிரச்சனைகளுக்கு உலகளாவிய கவனத்தை ஈர்த்து மக்களைச் செயல்பட தூண்டுகிறது.
இந்த நாள் ஒரு அடையாள நிகழ்வு மட்டும் அல்லாமல் உள்ளூர், தேசிய மற்றும் உலகளாவிய மட்டங்களில் உண்மையான சுற்றுச்சூழல் மாற்றத்தை முனைப்புடன் முன்னெடுத்துச் செல்கிறது.
நெகிழி மாசுபாடு:
நெகிழி மாசுபாடு மிகவும் வெளிப்படையான சுற்றுச்சூழல் நெருக்கடிகளில் முதன்மையானதாக விளங்குகிறது.ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான டன் நெகிழி கழிவுகள் கடல்களில் கலக்கின்றன.இவற்றால் கடல் வாழ் உயிரினங்களுக்கு தீங்கு நிகழ்வதோடு நுண் நெகிழிகள் வழியாக உணவுச் சங்கிலியிலும் நுழைகின்றன.
புவி தின பிரச்சாரங்கள் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகளை (use and throw) அழிக்கும் முயற்சியில் தீவிரமாக ஊக்குவிக்கின்றன.
மரம் நடுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல், ஆற்றலை சேமித்தல் மற்றும் உள்ளூர் தூய்மை பணிகளில் பங்கேற்பதன் மூலம் புவி தினத்தை அர்த்தமுள்ளதாகக் கொண்டாடலாம்.
புவி தினத்தை கொண்டாடும் வழிகள் சில..
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல்: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள்(carrybags) பயன்படுத்துவதை குறைத்து மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகள் (reusable bags)தண்ணீர் பாட்டில்களை பயன்படுத்துவது சிறப்பு.
மரங்கள் நடுதல்:
தெருக்களின் ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு அதனை பராமரிப்பது சிறப்பு. பள்ளிகளில் மாணவர்களை மரக்கன்றுகள் நடுவதற்கு பயிற்சியும் ஊக்கமும் அளித்தல்.
ஆற்றலை சேமித்தல்: மின்சாரம் மற்றும் நீர் பயன்பாட்டை குறைப்பது, தேவையில்லாத போது விளக்குகள் மற்றும் மின்னணு சாதனங்கள் பயன்பாட்டை குறைக்க ஊக்குவிப்பது சிறப்பு.
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு:
"நமது சக்தி,நமது கோளம் " எனும் கருப்பொருளின் படி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (சூரிய சக்தி காற்றாலை) மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் பரப்புவது சிறப்பு.
கழிவு மேலாண்மை:
குப்பைகளை வகைப்படுத்தி பயோடேக்ரடிபிள் (biodegradable and Non- biodegradable) அண்ட் நான் பயோடேக்ரடபிள் அகற்றுதல் மற்றும் வீட்டில் உரமாக்குதல் பயிற்சியை மேற்கொள்ளுதல்.
வாகன பயன்பாட்டை குறைப்பது:
அனைத்து இடங்களில் எங்கு சென்றாலும், குறுகிய தூரம் சென்றாலும் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பயன்பாட்டை குறைத்து மிதிவண்டி அல்லது நடந்து செல்வது சிறப்பு.
இது நமது பூமி
நமது சக்தி
நமது கோளம்
காப்பது நமது கடமை.
தொழில்நுட்பம் வளர்ந்தாலும், சுற்றுச்சூழல் காப்போம். நெகிழி இல்லா பூமிக்கு, இன்றே விதை விதைப்போம். மரங்களை நட்டு மண்ணைக் காப்போம். நமது பூமியை சொர்க்கமாய் மாற்றுவோம் என்று உறுதியளித்து
20 26 ஆம் ஆண்டின் பூமி தினத்தை கொண்டாடுவோம்.
மேலும் இதுபோன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு
ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!
நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!
முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு
நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்
ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்
போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?
முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்
{{comments.comment}}