என் மகன் சாதித்து விட்டார்.. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித்தின் தாயார் பெருமிதம்

Su.tha Arivalagan
Jul 25, 2026,04:58 PM IST

சத்ரபதி சம்பாஜிநகர், மகாராஷ்டிரா: என் மகன் மிகப் பெரிய காரியத்தை செய்திருக்கிறார். அவர் சாதித்து விட்டார் என்று கரப்பான்பூச்சி ஜனதாக் கட்சியின் தலைவர் அபிஜித் திப்கேவின் தாயார் அனிதா பெருமிதம் வெளியிட்டுள்ளார்.


மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரைச் சேர்ந்த தனது வீட்டில் தன்னைச் சந்தித்த செய்தியாளர்களிடம் அனிதா திப்கே கூறுகையில்,  நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்... மிகவும் பெருமையாக உணர்கிறேன்... அவர் அடிபட்டபோது நான் சில நேரங்களில் பயந்தேன். அவருக்கு என்னவாகுமோ என்று கவலைப்பட்டுக்கொண்டே இருந்தேன்... 




அவர்கள் அவரை அறைந்தார்கள். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. என்னால் தூங்க முடியவில்லை. அதிகாலை மூன்று அல்லது நான்கு மணி வரை விழித்திருந்தேன். என்னால் சாப்பிடவும் முடியவில்லை. நாங்கள் இருவருமே பசியையும் தூக்கத்தையும் இழந்தோம். 


ஜூன் 7 முதல், வீட்டில் எந்த வேலையும் செய்யத் தோன்றவில்லை... அவர் ஒரு மகத்தான காரியத்தை செய்திருக்கிறார்... அவர் இன்னும் மிகச் சிறிய வயதுடையவர்தான், ஆனாலும் இவ்வளவு சிறு வயதிலேயே மிக முக்கியமான ஒன்றைச் சாதித்துள்ளார். அவரை நினைத்து நான் அளவற்ற பெருமை கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.