தேசிய கணித தினமாச்சே இன்னிக்கு.. உங்களுக்கு ஓர் புதிர்.. விடையைச் சொல்லுங்க பார்ப்போம்!

Su.tha Arivalagan
Dec 22, 2025,01:53 PM IST

- அ.கோகிலா தேவி


தேசிய கணித தினத்தை இன்று நாம் கொண்டாடி வருகிறோம். இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு புதிச் சவால். நீங்க ரெடியா!


இதுதாங்க அந்த புதிர்..




மூன்று நண்பர்கள் ஒரு ஹோட்டலுக்கு செல்கிறார்கள். அவர்களின் பில் ரூபாய் 30 வருகிறது. ஆளுக்கு பத்து ரூபாய் வீதம் 30 ரூபாய் செலுத்துகிறார்கள்.


ஹோட்டல் மேலாளர் ரூபாய் ஐந்து தள்ளுபடி அளிக்கிறார். சர்வர் அந்த ஐந்து ரூபாய் ஆளுக்கு ஒரு ரூபாய் வீதம் மூன்று பேரிடமும் மூன்று ரூபாயை திருப்பித் தருகிறார். மீதமுள்ள இரண்டு ரூபாயை தன் பாக்கெட்டில் வைத்துக் கொள்கிறார் (டிப்ஸ்).


இப்போது கணக்கு பார்த்தால் நண்பர்கள் ஆளுக்கு ஒன்பது ரூபாய் கொடுத்துள்ளனர். (9 x 3 = 27) ஆக 27 ரூபாய். மேலும் சர்வர் பாக்கெடில் இருப்பது இரண்டு ரூபாய்  மொத்தம் 27 + 2 = 29


மீதி ஒரு ரூபாய் எங்கே போனது?


காணாமல் போன ஒரு ரூபாயை முடிந்தால் யாரேனும் கண்டுபிடிங்கள் பார்ப்போம். 


என்ன ஒரே குழப்பமாக உள்ளதா.. சரி சரி மண்டையை ரொம்பக் கசக்காதீங்க.. நாங்களை விடையையும் சொல்றோம்.


இதில் ஒரு கணக்கியல் தந்திரம் உள்ளது அது என்ன என்று பார்ப்போம். இதில் என்ன தவறு என்றால் 27 ரூபாய் உடன் இரண்டு ரூபாய் கூட்டுவது தான். நாம் தவறான எண்களை ஒன்றாக கூட்டுகிறோம்.


மொத்த தொகை ரூபாய் 30.. சரியா

மேலாளர் வாங்கியது ரூபாய் 25 (தள்ளுபடி ரூபாய் 5).. ஓகேவா

நண்பர்களிடம் திருப்பி கொடுத்தது ரூபாய் 3.. சரிதானே!

இப்போது சர்வரிடம் இருப்பது ரூபாய் 2.. கரெக்டா


இப்பக் கூட்டிப் பாருங்க


25 + 3 + 2 = 30


என்ன கணக்கு சரியாக வந்ததா!


இதுதாங்க கணக்கு.. இவ்வளவுதாங்க கணக்கு..!


(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)