என் தேவியின் கை.. என் நெற்றியில் பட்டால் .. அவளின் (ல்) அவன்! (13)
- ரதி தேவி
ரதியின் கண்களின்
பயம் கண்டு
மதன் தன் கரங்களால் ரதியின் கைகளைப் பிடித்துக் கண்அசைவின் வழி
நான் இருக்கிறேன் ரதி ...
கலக்கம் வேண்டாம்....
அந்த மனிதர் அருகில் வர வர ரதியின் கண்கள் இன்னும் கலக்கம்...
பிரம்மை பிடித்தவள் போல் ஆனாள்
மதன் ரதியின் கைகளை விடாமல் இரண்டு கைகளாலும் இருக்கப் பிடித்துக் கொண்டு தன் கைகளுக்குள் பிடித்து கொண்டான்.....
அவர் அவர்களை நெருங்கி வந்து
நீங்கள் ரதி தானே ..
ம்ம்... என்று அமைதியாக கூறினாள்....
நான் யாரென்று ஞாபகம் இருக்கா...
ம்...
தேங்க்ஸ்...
ஆமாம்...இவர் யார்...
ரதியால் பதில் கூற முடியாமல் தொண்டை அடைத்தது.....
மதனே பதில் சொன்னான்...
நான் ரதியின் ப்ரண்ட்...
ஓஓ....ரதி மேம்.... நீங்கள் இங்கே எப்படி..... ஊரில் தானே இருந்தீர்கள்..
எனக்கு இங்கே வேலை கிடைத்தது... அதனால் இங்கு இருக்கிறேன்..
ஒகே மேம்.... அப்புறம் என் ப்ரண்ட் கதிர் எங்கே ....
இப்போது தான் மதனுக்கு புரிந்தது... வந்தவர் ரதியின் கணவரின் நண்பர் என்று.....
அவர் ஊரில் இருக்கிறார்... நானும் அம்மாவும் மட்டும் இங்கு இருக்கிறோம்...
வேறு எதுவும் கேட்காமல்...ஒகே மேம்.. கிளம்புறேன் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி விட்டார்.....
படபடத்த ரதியின் இதயம் கொஞ்சம்
இளைப்பாறியது ...
ரதி தன் முகத்தை கைக்குட்டையால் துடைத்தப் போது ...
ரதி..ரதி ..
ம்ம்...
கூல்..ரதி.. நான் இருக்கிறேன்...
ஐ அம் .ஒகே மதன்..
தேங்க்ஸ்..ரதி...
ரதியின் தலை நிமிர வில்லை....
ரதி... இங்கே பாரு ...
வாடிய மலர் நிமிர்ந்தது போல்..ரதி தன் தலையை நிமிர்த்தி மதனை நோக்கினாள்....
மதனின் அந்த சிறு புன்னகை ரதியை என்னவோ செய்தது...
இமைகளைத் தாழ்த்தி கொண்டு
தன் கையில் இருந்த விபூதியை மதனிடம் நீட்டினாள் ......
ஏன்..ரதி
நீயே இடக்கூடாதா.... என் தேவியின் கை . என் நெற்றியில் பட்டால் என் சோகங்கள் அனைத்தும் பறந்து போய் விடும்...
ப்ளீஸ் ..ரதி நீயே வை .....
(தொடரும்)