உங்களை ரதின்னு கூப்பிடலாமா?.. அவளின் (ல்) அவன்! (7)
- ரதி தேவி
ரீங்... ரீங்...
நம்பரைப் பார்த்த ரதிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தாள். அம்மா வேற வீட்டில் இல்லை.
போனை எடுத்து ஆன் பண்ணி பேசலாமா? வேண்டாமா? சரி, அட்டெண்ட் பண்ணுவோம்.
"ஹலோ! ஹலோ!"
"என்னடி ரதி... போன் பண்ணா எடுக்கத் தெரியாதா? அவ்வளவு திமிரா உனக்கு...."
"இல்லை, இப்ப உங்களுக்கு என்ன வேணும், ஏன் போன் பண்ணி என் நிம்மதியைக் கெடுக்குறீங்க?"
"ஆமாண்டி... உன் நிம்மதியை நான் கெடுக்கிறேனா? ஏய் இங்க பாரு.. இங்க வர்றீயா? இல்லையா? நீ என்கூட வரல, நானே நேர்ல உன் ஊருக்கு வந்துருவேன்."
ரதி.. பதில் ஏதும் சொல்லாமல் போனைக் கட் செய்தாள்...
ரதியின் கண்கள் கலங்கின. இறைவனின் சோதனைதான் என்ன? ஏன் என் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டம்... கண்கள் சிவந்தன. கண்களின் ஓரங்களில் துளிகள் வழிந்தோடி தரையை நனைத்தன.
ரீங்... ரீங்... ரீங்...
துளிகளால் நிரம்பிய கண்களால் போனைப் பார்த்த போது நம்பர் மங்கலாகத் தெரிந்தன.
விழிகளைத் துடைத்துவிட்டுப் பார்த்தாள். மதனின் அழைப்பு...
மனதை அடக்கிக் கொண்டு போனை அட்டெண்ட் பண்ணினாள்.
"ஹலோ! ஹலோ!..."
ரதியின் குரலில் மதன் தன் மெய் மறந்து பதில் சொல்லல.
"ஹலோ... மதன் சார்"
"ஹலோ! ... ஹலோ!"
"ஹலோ ரதி மேம்.... ஸாரி...."
"சொல்லுங்க சார்.." ரதியின் பேச்சில் கவலை அறிந்த மதன்,
"ஹலோ! ரதி மேம்! என்னாச்சு மேம்... உங்க வாய்ஸ் டல்லா இருக்கு. உடம்பு சரியில்லையா?"
"நோ! மதன் சார்... கொஞ்சம் டயர்ட்..."
"ஓகே ரதி மேம்... உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்... ஃப்ரியா மேம்..."
"சொல்லுங்க மதன்.."
"ரதி மேம்... உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு... உங்களால் என் வாழ்க்கை வெளிச்சமாகுமா? மேம்..."
"ம்ம்....... ம்ம்....."
"ரதி மேம்...."
ம்ம்... சொல்லுங்க மதன்.."
இறக்கை இருந்தும் பறக்க முடியாத பூச்சி போன்று ரதியின் மனம் வருந்தியது... வார்த்தைகள் கூற முடியாமல் அமைதியானாள்.
"ஹலோ... ரதி மேம்..."
"ம்ம்... ம்ம்..."
"ரதி மேம்... உங்களை ரதின்னு கூப்பிடலாமா?"
"ம்ம்... ம்..."
"தேங்க்யூ... ரதி... ரதியே...."
ம்ம்ம்... ரதியின் மனம் பட்டாம்பூச்சியாய் பறந்தது. மதன் கூப்பிட்ட அந்த நொடிகள் ரதியின் இதயமே படபடவென அடித்தது.
"ஹலோ! ரதி... ஏன் எதுவும் பதில் சொல்லாமல் மௌனம்."
"நத்திங் மதன் சார்....."
"ரதி.... நான் இழந்த வாழ்க்கை கிடைக்குமா? எனக்கும் ஏற்கனவே மேரேஜ் ஆயிடுச்சி. ஆனால் அவ என்னை பார்க்கவில்லை. என் பணம் பார்த்து என்னை ஏமாற்றிவிட்டாள். நான் அவளை டைவர்ஸ் பண்ணிட்டேன். சட்டப்பூர்வமாக டைவர்ஸ்... ரதி...."
"ம்ம்... சொல்லுங்க மதன்..."
"இந்த மதன் பிடித்தவர்களிடம் மரியாதை எதிர்பார்க்கிறது இல்ல. என்னை மதன் என்றே கூப்பிடு ரதி...."
"ம்ம்... ம்ம்..."
"ரதி பதில் உடனே கிடைக்குமா?"
"ம்ம்... ம்ம்..."
"ரதி... ம்ம்... வேணாம்.. உன் பதில்..."
"கொஞ்சம் டைம் வேணும் சார்..."
"ரதி... ரதி......"
(தொடரும்)