உனக்காக நான் பிறந்திருந்தால்..! (அவளின் அவன் (6)

Mar 17, 2026,10:25 AM IST

- ரதி தேவி


ஹாய் மதன்.......

என்னை பற்றி தெரிந்திருந்தால் இப்படிக் கேட்டிருக்க மாட்டீங்க......


என்ன மேம்... சொல்லுங்க...

அது இல்லைங்க மதன் சார்.......


ரதி மேம் எதுவாக இருந்தாலும் சொல்லிடுங்க...


உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது


ஐயோ! மதன் உன்னையும் பிடித்திருக்கிறது என்று சொல்ல ரதிக்கு ஆசைதான். ஆனால், சரிபட்டு வருமா?


ஏற்கனவே நம் வாழ்க்கை வீணாகிடிச்சு.... என்று ரதி யோசிக்க யோசிக்க செய்வதறியாது சிலை போல் உட்கார்ந்திருந்தாள்.


மேம்... ஹலோ ரதி மேம்.....


நீங்கள் அன்மெரிட் தானே...


அதைப் பார்த்த ரதி.. அப்போதுதான் யோசித்தாள். கணவனின் கொடுமைத் தாங்காமல்.. அவன் கட்டிய தாலியைக் கழட்டி அம்மாவிடம் கொடுத்து வைத்து இருந்தாள்.


ஸாரி மதன் சார்.....


இதைப் பார்த்ததும் மதனுக்கே இதயம் சுக்கு நூறாகிவிட்டது. ரதி நம் காதலை ஏற்கவில்லையோ என்று...


ஹலோ சார்.....

ம்ம்ம்.... எஸ் மேம்.....


ரதி தன் வாழ்க்கையில் நடந்தவற்றை வாய்ஸ் மெசேஜாக அனுப்பினால்.


அதைக் கேட்டவுடன் மதனைக்கு கொஞ்சம் நிம்மதி என்றாலும் ரதி





இன்னும் முடிவு சொல்லவில்லையே என்று மனம் வருந்தினான்.


மதன் இறங்கும் நிறுத்தம் வந்தது. இறங்கி ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தான்.


மதனின் வருகை எதிர்நோக்கி காத்திருந்தாள் அவனின் அம்மா..


மதன் வாடா....

ம்.. சொல்லும்மா... கொஞ்சம் சோகமாகக் கூற


என்னடா மதன் ட்ரெயின்ல வந்த டயடா.....


மதன் நீ சீக்கிரம் ரெடியாகிட்டு வா... உன்கிட்ட ஒன்னு சொல்லணும்


சரி அம்மா.... தலையசைத்துக் கொண்டே... என்ன சொல்லப் போறாங்க அம்மா..?.......


மதன்... மதன்...


வரேன் மா......

இங்க பாருடா... இந்த போட்டோல இருக்கிறதுல எது 'Ok' னு சொல்லு


என்னம்மா போட்டோ...

டேய்..... உனக்குத்தான்... பொண்ணு போட்டோ...


வேண்டாம்மா.... எனக்கு எதுவும் பிடிக்கல....

ரதி போன்று யாருமில்லை.... என் வாழ்க்கை இனிமேல் ரதியோட இல்லை என்றால்... இப்படியே கழியட்டும் என் வாழ்க்கை என்று மன ஓட்டத்துடனே எழுந்து சென்றான்.


மதன் நில்லுடா... ஒன்னுமே சொல்லாம போற......

வெளியே போயிட்டு வரேன் மா.......


வாய்ஸ் மெஸேஜ் கேட்ட மதன் ரிப்ளை எதுவும் பண்ணலையே என்று ரதி நினைக்க....


ஹலோ மேம்....


எஸ் மதன் சார்.....

ஸாரி மேம்.. வீட்டுக்கு வந்துட்டேன்... அதனால ரிப்ளை பண்ண முடியலை ஸாரி மேம்...


இட்ஸ் ஓகே சார்.......

மேம்... உங்களைப் பார்த்தப்போ மேரேஜ் சிம்பள் எதுவும் தெரியல.. அதான் அன்மெரிடா னு கேட்டேன்.


ஸாரி மேம்......

இட்ஸ் ஓகே மதன் சார்... என் வாழ்க்கை நரகம்... அதில் வாழ விருப்பம் இல்லை.


ஸாரி மேம்..... ஷல் ஐ கால் யு மேம்.... உங்களுடன் பேசும்போது என் இதயம் இதமாக உள்ளது.


ம்ம்... சார்

ஓகே மேம்.


மதனின் மனம் பூவைக் கண்ட வண்ணத்துப் பூச்சியாக மாறியது. ரதியின் காதருகில் என் மனதின் ஒலி படப்போகிறது என்று நினைக்கும்போது மதனின் இதயம் துடிதுடித்தது. ரதியே உன் காதோரம் அந்த செந்நிற இதழ் போன்ற மடலைக் கடிக்கும் போது... நீ வெட்கத்தால் சிலிர்க்கும் அந்த காட்சியைக் காண்பது எப்போது?......


டரிங்... ரீங்...... ஒலித்தது ரதியின் போன்.


மதன் உங்களைப் பிடித்திருக்கிறது. ஆனால் சொல்லத்தான் வரவில்லை. உங்களுடன் பயணித்த போது உங்களின் அடக்கமான பதில், ஆரவாரமில்லாத புன்னகை... எளிமையின் அடையாளமாய் உனது தோற்றம்...


பெண்மையை மதிக்கும் உனது பேச்சு... என் மனதை இளக்கியது.


உனக்காக நான் பிறந்திருந்தால் உன்னை அடைவேன். இறைவனின் கணக்கு என்னவோ? எதுவோ? நடக்கும்.


இதுவரை நான் இழந்த சந்தோஷமும் திரும்ப கிடைக்குமா மதன்......


ரீங்... ரீங்... ரீங்... மீண்டும் ஒலித்தது போன்.


கற்பனையில் மிதந்த ரதி போன் அடிப்பது தெரியாமல் இரண்டாவது தடவை அடிக்கும் போது மதனே என்று போனைப் பார்த்தவள்......


நம்பர் மதன் இல்லை......

ரதியின் கண்கள் குளமாகின அந்த நம்பரைக் கண்டு...


ரீங்... ரீங்... ரீங்...


(தொடரும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

news

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

news

பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

news

அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்

news

ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!

news

ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!

news

புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?

news

Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்