- ரதி தேவி
மதனுக்கோ மனசு நிலையாக இல்லை.
ஏன் ரதி! இன்னும் பதில் மெசேஜ் அனுப்பல. ஒருவேளை நம்மைப் பிடிக்கலையா? பார்த்தும் பதில் வராதது, ஏதோ மனதை வருத்தியது.
ஜன்னல் வழியே தெரியும் மரம் செடி கொடிகள் ரயிலோடு வருவது போல் நாமும் ரதியோடே கொஞ்சம் போயிருந்திருக்கலாம் என்று நினைத்தான்.
போனை ஆன் பண்ணி ஆன் பண்ணி அடிக்கடி பார்த்து இதயமே கனத்தது.
ஏனோ? தவறாக மெசேஜ் பண்ணிட்டோமோ? என்று மதன் அதை டெலீட் பண்ண போனை எடுத்தான்.
ரதி இடைவிடாத விழிநீர் வடிந்த நீரைத் துடைத்துவிட்டு அந்த ப்ரைவேட் மெசேஜையையே பார்த்தாள்.
யாராக இருக்கும். அதிலும் என் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். ஒரு வேளை வேறு எண்ணிலிருந்து மறுபடியும் என்னிடம் பேச வரானோ, அன்று நீ கணவனாக இருக்கும்போது என்று பயந்தாள்.
என்ன செய்ய என்று யோசிக்கும் போது அதே ப்ரைவேட் நம்பரில் மெசேஜ் எடுத்துப் பார்க்கும் போது தாமரை நிலவைக் கண்ட தாமரை போல் ரதியின் செந்தாமரை முகம் மலர்ந்தது.
"ஹாய் மேம்... ஐ அம் மதன்"
பார்த்ததும் போனை தன் நெஞ்சிலே பதித்து, ம்ம்... மதனா?
சாரி மதன். ஹாய்.....
"இட்ஸ் ஓகே... மேம் வீட்டுக்கு வந்தாச்சா?"
ம்ம்...

சாப்பிட்டாச்சா?
நோ... மதன்... நீங்க எங்க?
ஐ அம் இன் ட்ரெயின் மேம் இன்னும் இறங்கவில்லை.
மேம்......
சொல்லுங்க மதன்......
இரு இதயங்கள் கம்பியில்லா இணைய வலைப்பின்னலில் இணைய கைவிரல்கள் தடுமாற, டைப் செய்ய முடியாமல் மதன் கொஞ்சம் திணறினான்.
மேம்......
சொல்லுங்க மதன்......
ஆர் யு ப்ரீ மேம்...
எஸ்.... மதன் சார், சொல்லுங்க... மேம்... உங்ககிட்ட நேரிலே நிறைய கேட்கணும்னு தோணுச்சு. ஆனால் முடியல.
மதன் சார் சொல்லுங்க...... ரதி மனதிற்குள், மதன் என்னைக் கேட்கப் போறான் ஒன்றும் புரியல.
ஐ அம் இன் கன்னியாகுமரி மேம்...
ம்ம்... என்னச் சொல்லப் போறானோ? மதன்... ரதியின் இதயம் படபடத்தது. ரூமிலே ஏசி ஓடினாலும் ரதியின் முகம் வியர்த்தது. மதன் சீக்கிரம் சொல்லு... என்று அவளின் இதயம் படபடத்தது. போனைத் தவிர ரூமின் அனைத்தும் மங்களாகவே தெரிந்தன அவளுக்கு.
மேம்... உங்களுடன் என் வாழ்க்கையை முழுமைப்படுத்த ஆசை.
ரொம்ப சிரமப்பட்டு மெசேஜ் பண்ணிட்டு போனை ஓரமாக வைத்தான் மதன். அப்பாடா அவளிடம் கேட்டுவிட்டேன்.
ரதியின் அழகை மறுபடி மறுபடி நினைக்கின்றான். மீன் போன்ற அவளின் கண்கள் இப்ப என்ன செய்யுமோ? என்று யோசித்தான்.
ரோஜா இதழ் போன்ற மென்மைக்குப் பெயர் போன அவளின் உதடுகள் என்ன முணுமுணுக்கும்?
மதனின் இதயம் துடிதுடிப்பாகத் துடித்தது.
ரயிலின் வேகம் ஏதோ அவனுக்கு மெதுவாக நடப்பது போன்று தோன்றியது. அடுத்த ஸ்டேஷனில் இறங்கணும் அதற்குள் ரதி பதில் அனுப்புவாளா?
மதனின் மனதிற்குள் கேள்வி அலைகள் அலைபாய்ந்து கொண்டே இருந்தது.
ஐயோ... ரதி மறுப்பு சொல்லிவிட்டால் என்ன செய்வேனோ...
ரதியிடம் அவன் வாழ்வில் நடந்த அனைத்தையும் கொட்டித் தீர்க்க வேண்டும் என்று நினைத்தான்.
"ரதி என் வாழ்வில் நீ வந்தால் ஓர் பிரகாசமான எதிர்காலம் நமக்கு" என்று கூற வேண்டும் போல் இருந்தது மதனுக்கு.
நாம் இருவரும் கண்டிப்பாக சேர வேண்டும். உன்னைப் பார்த்தவுடனேயே உன் கண்களிலேயே உன்னைப் பற்றித் தெரிந்து கொண்டேன்.
உன் பரிவான பேச்சு என் மனதில் உன்னை இழுத்துக் கொண்டது ரதி... உன்னை மறுபடியும் சந்திக்க நேரம் தருவாயா?
உன் கரங்களைப் பிடித்து என் ஆசையைக் கூற வேண்டும். உன்னுடன் இருந்த அந்தப் பொழுதில் நான் அனைத்தையும் மறந்திருந்தேன்.
என் கண்கள் உன்னையே நோட்டமிட்டதை பார்த்திருக்க மாட்டாய்...
ரதி......
ரதி.........
ஏன் இன்னும் ரிப்ளை இல்ல. ஒரு வேளை ஓகே இல்லையா... என்னைப் பிடிக்கலையா?
மறுபடியும் என் வாழ்க்கை இருட்டாகிடுமோ?
உன்னைப் பார்த்தது ஒரு தடவை என்றாலும் உன் மொத்த உருவமும் உன்னைப் பற்றி காட்டிக் கொடுத்து விட்டது ரதி.........
உன் ரிப்ளையில்தான் என் வாழ்வின் ஒளி.........
என்றெல்லாம் ரதியிடம் கூற வேண்டும் என்று மனதிற்குள் கோட்டை கட்டினான்.
ஏன் இன்னும் ரதி ரிப்ளை பண்ணல?.......
மதன் அனுப்பிய மெசேஜைப் பார்த்த ரதிக்கோ, தலை சுற்றியது......
(தொடரும்)
வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி
காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்
நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்
இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்தது மோடிதான்.. ராகுல் காந்தி
Jana Nayagan review முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் எப்படி இருக்கு?
ஒரு ஓட்டில் தோல்வி...தேர்தல் வழக்கை வாபஸ் பெற்றார் திமுக பெரியகருப்பன்
சிந்தனைச் சிதறல்... இறையும் இயற்கையும் இரண்டறக் கலந்த ஒன்றே!
செக் மோசடி வழக்கு: நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில்.. களை கட்டும் ஆடி முளைக்கொட்டு திருவிழா!
{{comments.comment}}