- ரதி தேவி
ரதி இந்த வண்டி புகை போல நீயும் மறைகின்றாயோ... வாசலில் நின்று கொண்டே பிளாட்பாரத்தின் தண்டவாளம் முடியும் வரை ரதி சென்ற பாதையையே பார்த்தான்.
தண்டவாளங்களின் பிரிவு ஏனோ, இரு மனங்களின் பிரிவு போல வருந்தினான்.
தன் இருக்கைக்கு வந்து ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்தான். விழிகள் இரண்டும் இமைக்க மறுத்தன. கதிரவனின் அனல் அதிகரிக்க அதிகரிக்க மதனின் இதயமும் ரத்த ஓட்டமும் குறைவதாக உணர்ந்தான்.
கையிலிருந்த கைபேசியைப் பார்த்ததும் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
“ஏம்மா? ரதி என்ன ஆச்சு? உடம்பு ஏதும் சரியில்லையா? ஏன் இப்படி பித்துப் பிடித்தது போல இருக்க?”
அவள் அம்மா கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் சொல்லாமலே அமைதியாக இருந்தாள்.
“என்ன ஆச்சோ இந்த பிள்ளைக்கு” என்று புலம்பிக் கொண்டே சென்றாள், அம்மா.

ரதியோ... "போன் வருமா? மதன் அழைப்பானா?" என நினைத்து நினைத்து போனையே வெறித்துப் பார்த்தாள்.
ரதியை விட்டு வண்டி கிளம்பிய ஒவ்வொரு நொடியும் மதனின் இதயம் எதையோ கொஞ்சம் கொஞ்சமாக இடிப்பது போன்று உணர்ந்தான்.
ஆம்... ரதியின் போன் நம்பர்
போன் பண்ணலாமா? ம்ம்.... மெசேஜ் அனுப்பலாமா? நினைத்து நினைத்து சில நொடிகள் போனது.
ரதியின் கண்கள் மதனின் விழிகளுக்கு முன் போன்று நீந்திக் கொண்டிருக்க...
ஹாய் ரதி......
ஏதோ பிரைவேட் மெசேஜ் என ரதி போனைக் கையில் எடுப்பதற்குள் ரிங் வந்தது.
அம்மா... அம்மா... அலறினாள். “என்ன ஆச்சு ரதி ஏன் அலற?”
அம்மா... போன்... போன்...
யாரு... யாரு....
அவர்தான்.....
ரதி... இரு நான் பேசுறேன்.
ஹலோ... ஹலோ.....
மறுமுனையில்
"ஹலோ ரதி" அவள் எங்க?
ரதியின் அம்மா, என்கிட்ட பேசு... என்ன வேணும் உனக்கு, இன்னும் ஏன் என் பொண்ண டார்ச்சர் பண்ற.
அதுதான் சரிவராதுனு சொல்லி முடிச்சாச்சே.... ஏன் மறுபடியும் போன் பண்ற.
போனை வை... உன்கூட வாழ்ந்த வாழ்க்கையை விட ரதி இப்போதான் நிம்மதியா இருக்கா...
போனை வை.....
மறுமுனையில் ஓ.. அப்படியா
என்னால தான் நிம்மதியை இழந்தாளோ? இருக்கட்டும் இருக்கட்டும் பார்த்துக்கிறேன் உன் பொண்ண....
பெற்றோர்கள் பார்த்து பார்த்து செய்து வைச்ச திருமணம்.
கல்யாணம் ஆன ஒரு வருடத்திலேயே ரதியின் வாழ்க்கை நரகம் ஆயிடுச்சு...
ரதியின் புருஷன் ஆரம்பத்தில் நல்லா பார்த்தாலும், நாள் போக போக ரதியை டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சான்.
எதற்கு எடுத்தாலும் குற்றம் குறை சொல்லி அவளை அடிக்க ஆரம்பிச்சான் கண்ட கண்ட வார்த்தையால் சுட ஆரம்பிச்சான்.
தாங்க முடியாத ரதி அப்பாகிட்ட சொல்ல... அப்பாவோ வந்து சமாதானம் படுத்தினாலும் அவன் திருந்தவே இல்லை.
ஆசை ஆசையாய் வளர்த்த மகளின் வாழ்க்கையை நினைத்து நினைத்து மனம் நொந்து போய் உடல் நலம் சரியில்லாமல்... ஒரு கட்டத்தில் மாரடைப்பு வந்து ரதியின் அப்பா இறந்துவிட,
ரதிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் நிற்க...
ஈமச்சடங்கிற்கு புருஷன் போக விடாமல் தடுக்க, ரதியோ அவனையும் மீறி அப்பாவின் இறுதிச் சடங்கிற்கு போனாள்.
அப்ப வந்தவளத் தான் அவன் இன்னும் வந்து பார்க்கல.
அம்மாவைத் தனியே விட்டு வர மனமில்லாமல் அம்மா கூடவே இருந்து விட்டாள்.
ரதி படித்திருந்ததால் அவளுக்கு விழுப்புரத்தில் வேலை கிடைக்க, அவளும் அம்மாவும் விழுப்புரத்தில் தங்கியிருந்தனர்.
சொந்த ஊர் திருவிழாவுக்காக அம்மா இரண்டு நாள் முன்பே கிளம்ப... வந்தாள், ரதி முந்தைய நாள்தான். விழிகளில் இருந்து துளி கையை நனைக்க உட்கார்ந்திருந்த ரதியைப் பார்த்து
ரதி... ரதி...
கண்ணீரைத் துடைத்துவிட்டு, என்னம்மா சொன்னான்
ஒன்னும் இல்லையம்மா நீ அழாதே!
நான் பேசிட்டேன், கூடிய சீக்கிரம் முடிவு கட்டுவோம் என்றவளை, கட்டித்தழுவி அழ ஆரம்பித்தாள்
இருவரின் விழிகளிலும் கண்ணீர் பெருக்கெடுக்க, அப்போதுதான், போன் கண்ணில் பட, அம்மா வரேன்...
போனில் யாரென்று பார்க்க எடுத்தாள்.
பிரைவேட் நம்பர்... யாராக இருக்கும் அந்த நம்பரையே ஒரு கணம் பார்த்தாள்.
(தொடரும்)
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த.. கொண்டாடப்பட்டு வரும்.. தேசிய பாதுகாப்பு தினம்
Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
மறக்க முடியாத மார்ச் 4.. யார் இந்த அய்யா வைகுண்டர்?
உலக உடல் பருமன் தினம் 2026: குண்டானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியாவிற்கு எந்த இடம்?
மென்மையாக இருந்தாலும் சற்றே பலமாக.. soft yet strong
உலக அமைதியை உருக்குலைக்கும் மத்திய கிழக்கு போர்.. பதற்றத்தைத் தணிப்பாரா பிரதமர் மோடி?
"போன் பண்ணலாமா?.... மெசேஜ் அனுப்பலாமா?".. அவளின் (ல்) அவன் (4)
திமுகவின் அடுத்த அதிரடி.. விளிம்புநிலையில் இருப்போர்க்கு சிறப்பு நிதி அறிவிப்பு!
பிடியை தளர்த்தாத திமுக, காங்கிரஸ்...நேரம் ஆக ஆக அதிகரிக்கும் பரபரப்பு
{{comments.comment}}