"மேம், எங்கே போறீங்க?".. அவளின் (ல்) அவன் (2)

Feb 17, 2026,01:16 PM IST

- ரதி தேவி


நேரம் ஆகிக் கொண்டேயிருந்தது. பயணிகள் ஒருவருக்கொருவர் சலுகை பேசிக் கொண்டு இருந்தனர். அந்த இனிய மாலை நேரக் காற்று ஜன்னல் ஓரம் இருந்த அவளின் கூந்தலைத் தழுவிக் கொண்டிருந்தது. அவள் தன் முகத்தில் இளந்தென்றலில் ஆடும் தன் கூந்தலை அவ்வப்போது எடுத்து விட்டுக் கொண்டு இருந்ததை அவன் பார்த்துக் கொண்டு இருந்தான். அவளிடம் பேச்சுக் கொடுக்கத் தயாரானான்.


அவளோ! அதைக் கொஞ்சம் கவனிக்காமல் ஜன்னல் வழியே மஞ்சள் நிற வானத்தை ரசித்துக் கொண்டு இருந்தாள்.


மறுபடியும் வாய்திறந்த அம்மா "தம்பி! நேரம் ஆயிடுச்சு சாப்பிடலையா?" என்று கேட்டார். 


"இல்லை மா, அடுத்த நிறுத்தத்தில் சாப்பாடு ஏதாவது வருமான்னு பார்க்கணும்" என்றான்.


இப்போதுதான் அவள் அந்தப் பேச்சைக் கவனித்தாள்.


திடீரென அவனின் கைப்பேசி ஒலிக்கத் தொடங்கியது. அவன் எடுத்துப் பேசலானான்.


"ஹலோ!"


"ஹலோ மதன்!" மறுமுனையில் அவனது அம்மா.


"தம்பி சாப்ட்டியா?"




"இல்லை மா இனிமேல் வாங்கணும்" என்றான்.


"சாப்பிட்டுட்டு, சீக்கிரமாத் தூங்கு" என்ற அன்னைக்கு உரிய பாசத்துடன் அவனது அம்மா கூற,


"சரிம்மா! நான் சாப்பிடுறேன். நீயும் பத்திரமா இரும்மா" என்று பதிலுக்குக் கூறினான். இருபுறமும் கைப்பேசி அணைக்கப்பட்டது. அணைக்கப்பட்ட கைப்பேசியைச் சில நொடிகள் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான் அவன் முகத்தில் ஓர் கவலைக் குடிகொண்டிருப்பதை அவளும் கவனிக்கத் தவறவில்லை.


அடுத்த நிறுத்தம் வந்தது. "சாப்பாடு! சாப்பாடு!" என்று கூவிக்கூவி விற்றனர். விற்றவனிடம் சாப்பாத்தி ஒரு பார்சல் வாங்கிக் கொண்டான். நேரம் இரவு 8.00 மணியை நெருங்கியது.


பார்சலை வாங்கினாலும் அதை உடனே சாப்பிட மனமில்லாதவனாக வைத்தான். அதைக் கவனித்த அவள் இப்போதாவது அவனிடம் பேசலாம் என்று முயன்றும் தோற்றுப் போனாள், சிறு நெருடலால்.


பக்கத்தில் இருந்த அம்மா அவளிடம், "ஏம்மா! இன்னும் சாப்பிடலையா? நீ மட்டும் தனியாவா வந்திருக்க?" என்று கேட்க, ...அவள் கொஞ்சம் கவலையுடன் சாப்டுவேன் மா. நான் மட்டும்தான் போறேன் என்று கூற, அவனும் அதைக் கவனித்தான்.


அவனே, கொஞ்சம் தயங்கி, கூச்சத்துடன் "மேம், எங்கே போறீங்க?"


அப்பாடா, இப்பவாவது பேசிடலாம்னு நினைச்சு. "நான் நாகர்கோவிலுக்குப் போறேன் சார்", என்று கூறி முடித்தாள்.


இருவரும் அவரவர் இரவு உணவைச் சாப்பிட்டு முடித்தனர். அவள் தன் கைப்பேசியில் கவனம் செலுத்திக் கொண்டு இருந்தாள். இருந்தாலும் மனம் அவனிடம் கேட்கலாமா? வேண்டாமா? என்றே யோசித்தது.


ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்கத் தொடங்கினாள்,


"சார், நீங்க எங்க இருந்து வர்றீங்க?"


"சென்னையில் இருந்து வரேன் மேம்" என்றான்.


அவளுக்குள் ஓர் புத்துணர்ச்சி. என்ன சென்னையா? என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டாள்.


பதிலுக்கு அவன், "மேம், நீங்க எங்க ஸ்டே பண்ணியிருக்கீங்க?"


"நான் விழுப்புரம் சார், நேட்டிவ் நாகர்கோவில்" என்றாள்.


இருவரும் சுமூகமாக கொஞ்சம் பேசிக் கொண்டார்கள். ஒருவருக்கொருவர் பெயர் தெரிந்து கொள்ளவில்லை இன்னும். நேரம் கடக்கத் தொடங்கியது. பக்கத்து கம்பார்ட்மெண்ட்டில் சில பேர் தூங்கத் தயாரானார்கள்.


இவர்களது கம்பார்ட்மென்ட்டிலும் ரெடி ஆனார்கள்.


ஆனால், அவளுக்கோ, அவனுக்கோ தூங்கச் செல்வதற்கு மனம் வரவில்லை. இருவரும் ஒருவரையொருவர் பார்க்கும் போது விழிகளில் ஓர் கவலையுடன் கூடிய புதிய உணர்வு ஏற்பட்டது போன்று இருந்தனர்.


“சீச்சீ... நேரம் இப்படி ஓடி விட்டதே” என்று எண்ணினான்.


வேறு வழியில்லாமல் இருவரும் அவரவர் சீட்டில் சென்று படுத்துக் கொண்டனர்.


அவளுக்கோ தூங்க மனம் இல்லாமல் போனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


இன்னும் எத்தனையோ கேட்க வேண்டும் என்று நினைத்து இப்படி ஆகிவிட்டதே என்று...


(தொடரும்)


1

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

IPL 2026: 200ஐத் தாண்டலையே.. கொல்கத்தாவை ஸ்டாப் பண்ணிடுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

news

தமிழ்ப் புத்தாண்டு .. பராபவத் தாய் பிறப்பெடுத்தாள் ஆண்டு அறுபதில் அவளும் ஒருதாய்!

news

புத்தாண்டே வருக, புன்னகையுடன் வாழ்த்திடு, ஒவ்வொருவரின் வாழ்விலும் புது பொலிவை தந்திடு!

news

உன் குரலில் என் இதயம் இளைப்பாறுகிறது.. அவளின் (ல்) அவன்! (9)

news

தமிழ்ப் புத்தாண்டில் இதைக் கற்போம்.. பூ கோர்க்கலாம் வாங்க!

news

Tamil New Year: முத்திரை பதிக்கப் போகும் தமிழ்ப் புத்தாண்டு.. சித்திரை மாத சிறப்புகள்!

news

கோவிலில் நடந்த கலாட்டா.. விஷாலின் விளையாட்டுகள் 10

news

சிந்தனைச் சிதறல்.. குறையை குறைவாய்க் காண்போம்.. நிறையை நிறைவாய்க் காண்போம்!

news

Dr Ambedkar Birth Anniversary: அறிவின் உச்சம் அம்பேத்கரின் சட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்