சென்னை: தமிழக அரசியலில் தற்போதைய சூழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதிமுகவின் உட்கட்சிப் பூசல் மற்றும் பிளவுகள் குறித்து தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் அதிரடியான மற்றும் பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள தற்போதைய பிளவுகளுக்குப் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சிகரமான காரணத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "திமுகவுடன் ரகசியமாக கூட்டணி வைக்க முயற்சி மேற்கொண்டதாலேயே அதிமுகவிற்குள் தற்போது மிகப்பெரிய பிளவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து தமிழ்நாட்டில் ஒரு புதிய ஆட்சியை அமைக்க முயற்சி செய்துள்ளனர். இந்த முயற்சியின் காரணமாகவே அதிமுகவினர் தற்போது கடும் தவிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்."

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களாகச் செயல்படும் கட்சிகள் ஒன்றிணைய முயன்றது கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொள்கை ரீதியாக மாறுபட்ட இரு கட்சிகள் கைக்கோர்க்க முயன்றதால், அதிமுகவின் உள் கட்டமைப்பு சிதைந்து, அக்கட்சியினர் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து, தவிப்புக்கு ஆளாகி வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியல் வட்டாரத்தில் பரவும் பரபரப்பு
அதிமுக-திமுக இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கூறி வரும் நிலையில், தற்போது அமைச்சர் நிர்மல் குமாரும் அதே குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அதிமுக.,விற்குள் ஏற்பட்டுள்ள இந்த உட்கட்சி பூசல் தான், அக்கட்சியை சேர்ந்த பலரும் தவெக.,வில் வந்து தொடர்ந்து இணைந்து வருவதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்கூல் பெஞ்ச்.. என் ஸ்கூல் அனுபவங்கள் (பார்ட் 1)
விண்வெளியில் இந்தியாவின் வரலாற்று சாதனை.. புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை செலுத்தியது
CJP in Crisis: காக்ரோச் ஜனதாக் கட்சியில் திடீர் பிளவு.. புதிய அமைப்பு பிறந்தது!
அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி கல்வி மறுக்கப்படுகிறதா?.. 60,000 கணினி ஆசிரியர் குடும்பங்கள் கேள்வி
வானொலியுடன் என்றும் இணைந்து இருங்கள்: மாணவர்களுக்கு அறிவிப்பாளர் வேல்முருகன் அறிவுரை
It's Okay mean, It's not Okay. But it's Okay
செல்வமா? செல்வாக்கா?
"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"
கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !
{{comments.comment}}