அதிமுகவினரின் வேதனை போதும்.. இளைஞர்களுக்கு வழி விடுங்கள்.. ராஜ் சத்யன்

Jun 01, 2026,06:16 PM IST

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடைய விடாதீர்கள். 

வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் என்று அதிமுக ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் கூறியுள்ளார்.


தஞ்சை மாவட்டம் திருப்பணந்தாளைச் சேர்ந்த அதிமுக தொண்டர் மகேந்திரன் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அதிமுகவில் நிலவும் குழப்பங்கள், ஒற்றுமையின்மை ஆகியவற்றால் மன வேதனை அடைந்து அவர் தனது முடிவைத் தேடிக் கொண்டது அதிமுக வட்டாரத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் வெளியிட்டுள்ள அறிக்கை:


அதிமுகவின் வளர்ச்சிக்கும், ஒற்றுமைக்கும் எதிராகக் நடந்த செயல்களால் கடந்த சில தினங்களாகவே மிகுந்த மனவேதனை அடைந்த தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழக வர்த்தக அணி இணைச் செயலாளரும், முகநூல் பக்கங்களில் கடுமையாக கழக பணி ஆற்றக்கூடிய கே.எஸ். பூக்கடை மகேந்திரன் அவர்கள், "கழகம் மீண்டும் வலிமையோடு எழுந்து வர வேண்டும்" என்ற கனவோடு தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.




தேர்தல் தோல்விகளில் இருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் கழகத்திற்கு எதிரான சிலரின் நடவடிக்கைகளால் இன்று ஒரு தூய தொண்டரை நாம் இழந்திருக்கிறோம். இது அதிமுகவிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.


தமிழகம் முழுவதும் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கழகமே கோயில், அம்மாவே தெய்வம் என்று வாழ்ந்து வரும் லட்சோப லட்சம் தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தின் உயிர்நாடி. இத்தகைய தொண்டர்களின் மனநிலையை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்திருந்தால், மகேந்திரன் போன்ற ஒரு துடிப்புள்ள தொண்டரை நாம் இழந்திருக்க மாட்டோம்.


தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்களை இனியும் மனவேதனை அடைய விடாதீர்கள்

வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள். மறைந்த தம்பி கே.எஸ். பூக்கடை மகேந்திரன் அவர்களுக்கு எங்களது கண்ணீர் அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Tamil Nadu Budget: ஆகஸ்ட் 5-இல் தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!

news

பெரம்பூர் தேர்தல் வழக்கு : முதல்வர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

news

எம்எல்ஏ.,வை கைது செய்ய முடியுமா?: சபாநாயகர் விளக்கம்!

news

பிரதமர் மோடி நிபந்தனையின்றி மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி விமர்சனம்

news

“எங்களுக்கு அநீதி நடந்துள்ளது” – 'ஜனநாயகன்' ரிலீஸ் குறித்து இயக்குனர் எச்.வினோத் பரபரப்பு பேட்டி!

news

"புத்தகப் பை சுமை குறைக்கப்படும்": பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!

news

மக்களவையில் 2ஆவது நாளாக எதிர்கட்சிகள் அமளி: தொடர்ந்து அவை ஒத்திவைப்பு!

news

பிரதமர் மோடி தலைமையில் தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம்

news

பி.வி. சிந்துவுக்கு விராட் கோலி சொன்ன அந்த ஒரு வார்த்தை.. ஜப்பானில் நடந்த மேஜிக்!

அதிகம் பார்க்கும் செய்திகள்