கொட்டுகிற மழையினிலே குடையின்றி நடந்து வந்தேன் !

Sep 04, 2026,01:30 PM IST

- கவிஞர் பி.எஸ். முருகேசன்


கொட்டுகிற மழையினிலே

குடையின்றி நடந்து வந்தேன் 

வெட்டுகிற மின் ஒளியில்

விடியலை தேடி வந்தேன் 


தட்டுகிற இடி ஓசை 

தாளத்தில் பாட வந்தேன் 

நடுங்கும் குளிரினிலே

நடனம் ஆட வந்தேன்


மழை நின்றும் 

தூவுதே

மரம் செடி கொடிகளிலே

பூமியின் மடிமீது 

புல்லில் 

நீர்த் துளிகள்




கண்ணாடி பளிங்கு போல 

எங்கும் தெரியுதே 

கதிரவன் ஒளி பட்டால் 

காட்சியும் மறையுதே 


மழை பெய்ய

மண் செழிக்கும் 

விளைந்து வளம் 

கொழிக்கும் 

கொடிய பசி நீங்கி 

மனித குலம் தலைக்கும் 


நடுவோம் மரக்கன்று 

பெறுவோம் மழை நன்று 

இயற்கை வளம் 

மீட்போம் 

இனிதாய் நலம் 

காப்போம்


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்