சென்னை : சென்னையில் ரூ.1200 கோடியில் விரைவில் புதிய தலைமை செயல்கம் கட்டப்படும் என தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டுள்ள முதல்வர் இந்த தகவலை அறிவித்துள்ளார்.
புதிய தலைமை செயலகம் :
இன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசிய முதல்வர் விஜய், "தற்போது ஜார்ஜ் கோர்ட்டையில் இயங்கி வரும் தலைமை செயலகம் 400 ஆண்டுகள் பழமையான கட்டிடம். இதில் 4 ஏக்கர் பரப்பளவு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. வாகனம் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அனைத்தும் நெருக்கடியாக இட வசதி இல்லாமல் இருப்பதால் புதிய தலைமை செயலகம் அவசியமானதாகும். இவற்றை கருத்தில் கொண்டு ரூ.1200 கோடி செயவில் சென்னையில் விரைவில் புதிய தலைமை செயலகம் அமைக்கப்படும். 20 லட்சம் சதுரடி பரப்பளவில் சட்டசபை, அரங்குகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் கொண்ட தலைமை செயலகம் விரைவில் கட்டப்படும்" என அறிவித்துள்ளார்.

தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும். போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டுவந்து ஒருங்கிணைக்கப்படும்.
மேலும் அவர் பேசுகையில், அடுத்த 100 ஆண்டுகள் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நவீன சட்டசபை, தலைமை செயலக வளாகம் அடங்கிய புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் விஜய், சென்னையில் உலகத் தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
தமிழை வழக்காடு மொழியாக தீர்மானம் :
சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க வலியுறுத்தி முதல்வர் விஜய், சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டு வந்துள்ளார். தமிழ் மொழியை நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்க வேண்டும் என மத்திய அரசையும் வலியுறுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுகள், தீர்ப்புகள் ஆகியவற்றை சாமானி மக்களும் அறியும் வகையில் இந்த நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ் நீதிமன்ற உத்தரவுகள் வந்தால் அது நீதி தேவதையின் கரங்களை பலப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போராளிகளின் வரலாற்றை சற்றுப் படியுங்கள் தம்பி.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
அத்தனை நீளமாகப் பேசியும் detention copy பற்றி மூச்சுவிடவில்லையே.. ஸ்டாலினுக்கு தவெக கேள்வி
தாராபுரம்: அமராவதி ஆற்றின் கரையில்… மாறிக்கொண்டே இருக்கும் அரசியல் களம்!
மதுராந்தகம்.. ஏரிகாத்த ராமர் முதல் தேர்தல் களம் வரை… தனித்துவம் கொண்ட தொகுதி!
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
இளையராஜாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் பின்னணி!
தாய்மாமன் தங்க மோதிர திட்ட டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
மடப்புரம் அஜித்குமார் வழக்கு: 4 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு!
தவெக.,விற்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: 'விசில்' சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்!
{{comments.comment}}