என் உயிர் உனக்காக... உண்மை...ப்ளீஸ் ரதி .. அவளின் (ல்) அவன்! (18)

Jun 02, 2026,03:16 PM IST

- ரதிதேவி


வேக வேகமாகவும் படபடப்பாக கிளம்பினாள் ரதி


அம்மாவிடம் ஆபிஸ் போறதா சொல்லி மதன் சொன்ன இடத்துக்கு கிளம்பினாள் 


ஆட்டோவில் போகும் போதே மதனுக்கு வந்திட்டிருக்கேன் என்று மெஸேஜ் போட்டாள்...


பதிலுக்கு மதன் ஒகே ரதி ..என்றான்...


மதன் கூறிய இடம் வந்து விட்டது...


ஹலோ மதன் வந்திட்டேன்..


ரதி கொஞ்சம் வெயிட் பண்ணு...


ஒகே மதன்...

ரதியின் இதயம் முழுவதும் படபடப்பு...




ஒன்னுமே புரியல....

 

மதன் வந்தவுடன் 


ரதி  முகம் ஏன் இவ்வளவு பரபரப்பாக இருக்கு ...

ரதி கூல்...

உனக்கான நான் உன்னை ஏமாற்ற மாட்டேன்...

என் உயிர் உனக்காக... உண்மை...ப்ளீஸ் ரதி .. கொஞ்சம் கூல் ஆகு ... இப்படி உந்தன் முகம் காண முடியவில்லை..

இன்னும் கொஞ்ச நேரத்தில் எல்லாம் புரிந்து கொள்வாய் ...


ஒகே ரதி.. சாப்பிட்டியா ..


ஏதாவது சாப்பிடலாமா...


வேண்டாம் மதன்.சாப்பிட்டு தான் வந்தேன்...


ரதி ... இன்றைக்கு உந்தன் அழகில் ஒன்னு மிஸ்ஸிங்...


என்ன மதன்...


இந்தா ரதி என்று கையில் பூ வை நீட்டினான்... ஒற்றை சிவப்பு ரோஜா ... ரதியின் கூந்தலுக்கு அழகூட்டும் அழகிய பூ ....


ரதி மறுக்காமல் வாங்கி வைத்துக் கொண்டாள் .... 


மதன் புன்முறுவலுடன்..


ரதி ரோஜாவுக்கே இப்பதான் கொள்ளை அழகு....அதை ரதி வைத்து கொண்டதால் ..ரதி ... இங்க பாரு...


ரதிக்கோ கொஞ்சம் கோபம்... என்ன மதன் கவலையே இல்லாமல் இப்படி பேசிறானே ....

என்ன நடக்குது .. என்ன நடக்க போகுது..

எதுக்கு இங்க வர சொன்னான்...

வரச் சொல்லிட்டு 

என்று மனசுக்குளே குமுறிக் கொண்டு இருந்தாள்....


ரதி ப்ளீஸ் 

என்னைப் பாரு ...

ரதி கூல்...


ம்.. மதன்


(தொடரும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்