"மேம் எங்க இறங்க போறீங்க?".. அவளின் (ல்) அவன் (3)

Feb 24, 2026,10:41 AM IST

- ரதி தேவி


அவள் எழுந்து அவனது சீட்டிற்கு அருகே எதிரில் ஜன்னலோரம் வந்து அமர்ந்து கொண்டாள்.


அவள் மனதில் ஏதோ கூறிக் கொண்டே இருந்தது, அவளுக்குத் தெரியாமல்.


அவளது போன் ஒலிக்கத் தொடங்கியது, அந்தச் சத்தத்தில் அவன் கண் விழிக்கத் தவறவில்லை.


அவளோ ஏதோ நடந்தது போல் ஐயோ! அவனது தூக்கத்தைக் கலைத்து விட்டதே இந்த பாழாய்ப்போன போன் என்று திட்டிக் கொண்டே போனை ஆன் செய்து பேசினாள்.


"ஹலோ! ரதி ஹலோ சொல்லும்மா என்னம்மா" என்று தன் அம்மாவிடம் கேட்டாள்.


"ரதி எங்க வந்திட்டுருக்க?"


"இன்னும் மூணு ஸ்டாப் இருக்கும்மா, வந்துடுவேன்" என்றாள்.


"சரி! ரதி பார்த்து வாம்மா!"


"ok அம்மா!"




அவள் பேசியதை எல்லாம் மதனின் காதில் விழுந்தது. அவனும் சீக்கிரமாக இறங்கிவிடுவாளே என்று நினைத்து உடனே படுக்கையில் இருந்து எழுந்தான்.


விடியும் வேளை, மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த வானம், இளந்தென்றல் உலாவர, கதிரவன் தன் செங்கதிரை ஜன்னல் வழியே பாய்ச்ச,


இருவரும் அந்த இனிய காலைப் பொழுதை ஜன்னல் வழியே ரசிக்க ஆரம்பித்தனர்.


அவனுடைய செட்டப் எல்லாம் அவள் யார்? பெயர் என்ன? எங்கே, என்ன செய்கிறாள் என்று கேட்க வேண்டும் என்றே இருந்தது.


அவளின் பார்வை ஜன்னலின் ஓரம் என்றாலும் அவனையும் கவனித்தாள்.


இருவரும் சகஜம் சிறு புன்னகையை உதிர்த்தனர். கதிரவனின் செங்கதிரின் ஊடே இருவர் விழிகளின் காந்தப் பார்வைகள் துளைத்துக் கொண்டு விண்வெளி போன்று பல வண்ண ஆசைகள் சிறகடித்தது போன்று இருந்தது.


ரதிக்கு இன்னும் பெயர்கூட தெரியவில்லையே என்று நினைக்கும் போதே, மதனே ஆரம்பித்தான்.


நாகரீகமாக, "குட்மார்னிங் மேம்!"


"குட்மார்னிங் சார்!"


"மேம் எங்க இறங்க போறீங்க?"


"நாகர்கோவில் சார்."


"ஓ! அப்படியா! இரவு சொன்னீங்களா மறந்துட்டேன். ஐ அம் சாரி மேம்" என்று சிறு புன்னகையுடன் கூறினான்.


"மேம் உங்கள் பெயர்..."


அவள் சிறிது மௌனம் கலைந்து...


"ரதி... சார்..."


மதனின் மனதில் 'ரதி' எவ்வளவு அழகான பெயர். பெயர் போன்று அவளின் அழகும் கொள்ளைப் போகின்றது. ரதியாவது என் வாழ்க்கையை முழுமையடையச் செய்வாளா? என்று ஓர் ஆசையினை அவன் இதயத்தில் ஓட ஆரம்பித்தது. 


அவளின் கண்களைக் கவனித்த மதன், தானாகவே, தன் பெயரைக் கூற "ஐ அம் மதன்......" 


அவள் மனதில் ஒரு பட்டாம்பூச்சி சிறகடித்து பறப்பதைப் போல் உணர்ந்தாள். 


"மதன்... மதன்..." இரண்டு முறை மனதிலே சொல்லிப் பார்த்தாள். 


அவளின் அமைதியைக் கண்ட அவன், "மேம்... மேம்... மேம்..." என்று அழைத்தப் பிறகுதான் சற்று நினைவுக்கு வந்தவள் "ஐ - அம் சாரி... சார்..."


இனிய காலைக் கதிரவனின் செங்கதிர்களின் ஊடே இருவரின் கண்களும் பரிமாறிக்கொண்டன. 


எப்படி கேட்பது என்று இருவர் மனதிலும் ஓர் ஓட்டம். ரதிக்கோ! அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடுவோம்! பிறகு எப்போது சந்திக்க முடியும் என்று பல வருடம் பழகியது போல் உணர்ந்தாள். 


அவளின் உள்ளுணர்வை அவளின் விழிகளின் மூலம் அறிந்த மதன்... "மேம்... நீங்கள் விழுப்புரம், நான் சென்னை. தங்களுக்கு சங்கடம் ஏதும் இல்லை எனில் தங்களின் போன் நம்பர் தரமுடியுமா?" 


அவளுக்கோ, இதயம் படபடவென அடித்தது. இதைத்தான் எதிர்பார்த்தேனா!


ரதி இறங்கும் நிறுத்தம் வந்தது. அவள் இறங்க, மதன் வாசல் வரை வந்து,


அவளையேப் பார்த்துக் கொண்டு இருந்தான். தொடர்வண்டியின் சத்தம் ஏதோ அவள் காதில் சங்கு ஊதுவது போல் இருந்தது.


பின் கொஞ்சம் அமைதியாக நின்று, பின்னே திரும்பி மதனைப் பார்த்தாள்.


தானும் இறங்கிவிடலாமா? என்று மதனின் உள்மனம் துடித்தது.


ரதி... இதயம் உச்சரிக்க நா எழ... இதழ் விரியவில்லை.


(தொடரும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நான் என்னுடைய சுய கணக்கெடுப்பை முடித்து விட்டேன்.. வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்

news

Census: தமிழகத்தில் ஆகஸ்ட் 1 முதல் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்!

news

ரோஹித் சர்மா ஓய்வு பெற நிர்ப்பந்தமா.. உண்மையில் என்னதான் நடக்கிறது?

news

ஜோர்டானில் இருந்த அமெரிக்க போர் விமானங்களை அழித்ததாக ஈரான் அதிரடி தகவல்

news

ரயில் டிக்கெட் முன்பதிவை எளிதாக்க ஐஆர்சிடிசி (IRCTC) புதிய பீட்டா பதிப்பு அறிமுகம்

news

சிந்தனைச் சிதறல்.. தனித்துவமும் தன் மதிப்பும் மிகுந்த தனிமையே உயர்வானது!

news

ரஷ்ய எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா மீது 100% வரி? அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா

news

ஓய்வறியா தமிழ்ச் சூரியன்.. தளராமல் தமிழ் வளர்க்கும் பாரதிச்சுடர் நா.வே.நீலகண்டத் தமிழன்!

news

மிஸ்..இந்த வாட்டியும் வந்ததா!.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்

அதிகம் பார்க்கும் செய்திகள்