கே.என்.நேரு மனு தள்ளுபடி: வழக்குப்பதிவு செய்யத் தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Oct 26, 2026,12:04 PM IST

சென்னை: நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களில் முறைகேடு செய்து ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வழக்குப்பதிவு செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி கே.என். நேரு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


ரூ.634 கோடி லஞ்சப் புகார் பின்னணி:


திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் காலியாக இருந்த 2,538 பணியிடங்களை நிரப்புவதில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த பணி நியமனங்களுக்காக அன்றைய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த கே.என்.நேரு, ரூ.634 கோடி லஞ்சமாகப் பெற்றதாக அ.தி.மு.க எம்பி இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். மேலும், இது தொடர்பாக அமலாக்கத்துறையும் (ED) லஞ்ச ஒழிப்புத்துறைக்குக் கடிதம் எழுதியிருந்தது.


தனி நீதிபதியின் உத்தரவு:




இன்பதுரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத் தனி நீதிபதி, நகராட்சி நிர்வாகத்துறையில் நடைபெற்ற பணி நியமன முறைகேடு மற்றும் லஞ்சப் புகார் குறித்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.


சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு:


தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்தும், அதனை மறுஆய்வு செய்யக்கோரியும் கே.என்.நேரு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று பரிசீலித்த உயர்நீதிமன்றம், தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட மறுப்பு தெரிவித்து, கே.என்.நேருவின் மறுஆய்வு மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம், முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு இருந்த தடைகள் அனைத்தும் நீங்கியுள்ளன. இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை எந்த நேரத்திலும் வழக்குப்பதிவு செய்யக்கூடும் என்பதால் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது கே.என்.நேருவுக்கு எதிராக கோர்ட் வழங்கி உள்ள இந்த உத்தரவு திமுக.,விற்கு நெருக்கடியாக அமைய வாய்ப்புள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வாழ்க்கை நெறி!

news

புராணங்கள் அடையாளம் காட்டிய பண்பின் சிகரங்கள்!

news

கே.என்.நேரு மனு தள்ளுபடி: வழக்குப்பதிவு செய்யத் தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

"தர்ப்ப சயனராமர்" என ராமர் அழைக்கப்படுவது ஏன்? - சென்னை to ராமேஸ்வரம் - ஆன்மீகப் பயணம் (3)

news

Monday Thoughts: சிந்திக்க சில வரிகள் - அன்றும், இன்றும் நம் வாழ்க்கை - மகிழ்ச்சி எங்கே?!

news

மரங்கள்.. ஒரு நிமிடக் கதை (46)

news

தென்தமிழ் தலையங்கம்: மக்கள் பணத்தில் விளைந்த திட்டங்கள் - கட்சிகள் உரிமை கொண்டாடுவது நியாயமா?

news

வங்கக்கடலில் உருவானது 'அர்னாப்' புயல்: தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு

news

Kodaikanal Rains: கொடைக்கானலில் கொட்டித்தீர்க்கும் கனமழை- பழனி வழிப்போக்குவரத்து முடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்