- பூரணவள்ளி சேகர்
வேலன் தன் குறைந்த வருமானத்தில் தன் மகன் பாலனுடன் வாழ்ந்து வந்தான். வேலன் அறிந்த ஒரே வேலை மரம் வெட்டுவது மட்டுமே.
பாலனின் ஆசிரியர் மரங்களின் பயன் பற்றி அன்று பாடத்தில் சொல்லிக் கொடுத்தார். மேலும் மரங்கள் இல்லை எனில் நம் மக்களின் வாழ்க்கை முடிந்துவிடும் என்று விளக்கினார்.
மறுநாள் வேலன் மரங்களை வெட்ட கோடரி மற்றும் அரிவாளுடன் கிளம்பும் போது பாலன் அப்பாவைத் தடுத்தான். எல்லா மரங்களும் மக்களுக்கு நன்மையே செய்கின்றன. அவை இல்லை என்றால் நம் பசிப்பிணி பிடித்துக் கொள்ளும்.
புவி வெப்பமடைதல் நிகழும். சுத்தமான காற்று கிடைக்காது என்றெல்லாம் பாலன் தன் அப்பாவிற்கு எடுத்துக் கூறினான். தனக்குத் தெரிந்த வேலை இதுதான். நாம் இருவரும் வாழ நான் இதைச் செய்ய வேண்டும் என்று வேலன் தன் மகனுக்கு சமாதானம் கூறினான்.

வேறு வழியின்றி வேலன் மரம் வெட்டி வந்த பின் இன்று எத்தனை மரம் வெட்டினீர்கள் அப்பா என்று பாலன் கேட்பான். மறுநாள் காலையில் பாலன் வேகமாக வெளியே சென்று விடுவான். இதுபற்றி வேலன் விசாரித்த போது நீங்கள் வெட்டுவதைப் போல இரு மடங்கு மரக்கன்றுகளை பாலன் தெரு ஓரங்களில் நட்டு வளர்த்து வருவது பற்றிக் கூறினான்.
பாலனின் அம்மா மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்ததை நினைவூட்டினான். காற்று மிகவும் அவசியம். சுத்தமான காற்று மேலும் அவசியம் என்று சொன்னான். மனிதன் இல்லாவிட்டாலும் மரங்கள் இயற்கையில் தாமே வளர்ந்து விடும். ஆனால் மரங்கள் இல்லையெனில் மனிதர் ஒருவர் கூட உயிர் வாழ முடியாது என்று உணர வைத்தான் பாலன்.
தெருவோரங்களில் பாலன் மரங்கள் நட்டு வளர்ப்பதை அறிந்த பலர் சமூக வலைதளங்களில் பரப்பினர். பாலன் புகழ் ஊரெல்லாம் பரவியது. முதல்வரின் சிறப்பு கவனத்தை ஈர்த்த பாலன் பரிசளிக்கப்பட்டு பாராட்டப்பட்டான்.
அன்றிலிருந்து மரம் வெட்டுவதை விடுத்து மரம் நடுவது வேலனுக்கும் பழக்கமானது.
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)
கே.என்.நேரு மனு தள்ளுபடி: வழக்குப்பதிவு செய்யத் தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
"தர்ப்ப சயனராமர்" என ராமர் அழைக்கப்படுவது ஏன்? - சென்னை to ராமேஸ்வரம் - ஆன்மீகப் பயணம் (3)
Monday Thoughts: சிந்திக்க சில வரிகள் - அன்றும், இன்றும் நம் வாழ்க்கை - மகிழ்ச்சி எங்கே?!
மரங்கள்.. ஒரு நிமிடக் கதை (46)
தென்தமிழ் தலையங்கம்: மக்கள் பணத்தில் விளைந்த திட்டங்கள் - கட்சிகள் உரிமை கொண்டாடுவது நியாயமா?
வங்கக்கடலில் உருவானது 'அர்னாப்' புயல்: தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு
Kodaikanal Rains: கொடைக்கானலில் கொட்டித்தீர்க்கும் கனமழை- பழனி வழிப்போக்குவரத்து முடக்கம்!
5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.. சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
அறுசுவை தாமு அண்டத்தில் சேர்ந்தார்!
{{comments.comment}}