"சோறு கண்ட இடம் சொர்க்கம்".. இந்தப் பழமொழியின் உண்மை அர்த்தம் என்ன தெரியுமா?

Oct 25, 2026,01:21 PM IST

- அ.சுபாலட்சுமி


இன்று (25 அக்டோபர் 2026)ஐப்பசி மாதம் பௌர்ணமி. இந்த நாளுக்கு ஏற்ற ஒரு பழமொழியை பார்ப்போமா?


"சோறு கண்ட இடம் சொர்க்கம்" என்ற பழமொழிதான் அது.


இதை நம்மவர்கள் வேறு மாதிரியான பொருளில்தான் இதை இத்தனை காலமாக புரிந்து வைத்துப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பொதுவான அர்த்தமும் உண்மையான ஆன்மீக அர்த்தமும் வேறு வேறாகும்.


உறவினர்கள் அல்லது நண்பர்கள் வீட்டுக்குச் விருந்துக்குச் சென்றுவிட்டு, அங்கும் பல நாட்கள் தங்கி தொடர்ந்து சாப்பிடுபவர்களைக் கேலியாகச் சொல்வது வழக்கமான பொருள். எங்கு இலவசமாகவோ அல்லது விரும்பியபடி நல்ல உணவு கிடைக்கிறதோ, அந்த இடத்தையே சொர்க்கம் என நினைத்து ஒட்டிக்கொள்வது என்ற கேலிப் பொருளில் இது பயன்படுத்தப்படுகிறது.




உண்மையான ஆன்மீக அர்த்தம்:


ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் சிவாலயங்களில் சிவபெருமானின் லிங்கத் திருமேனிக்கு பச்சரிசி வெள்ளை அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படும். இதனை அன்னாபிஷேகம் என்பர். 


இந்த அன்னாபிஷேகத்தைக் கண்ணாரத் தரிசித்தால், ஏழு பிறவிப் பாவங்கள் நீங்கி சொர்க்கம் கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளது. 


"சோறு கண்ட இடம் சொர்க்கம்" என்பது காலப்போக்கில் மருவி இப்படி மாறியுள்ளது. இதன் உண்மையான பொருள் "சிவபெருமானுக்கு அன்னம் படைத்து அன்னாபிஷேகம் கண்ட இடமே சொர்க்கம்" என்பதாகும்.


(அ.சுபாலட்சுமி M.Sc, M.Ed, ஆசிரியர். கவிதை எழுதுவது, புகைப்படம் எடுப்பது, ஓவியம் வரைதல், கைவினை பொருட்கள் செய்தலில் வல்லவர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்