- சிவசத்தியா, காரைக்குடி
அத்திக்குச்சி
நாயுருவி
எருக்கன் குச்சி
அரசங் குச்சி
கருங்காலி(க்கட்டை)
வன்னிக்குச்சி
புரசங்குச்சி
வில்வக்குச்சி
அருகம்புல்
ஆலங்குச்சி
நொச்சியென
ஒவ்வொரு
குச்சி க்கும்
ஒவ்வொரு வேண்டுதல்கள்
இருக்கின்றன
விளக்குமாறே உனை
வைக்கும் இடத்தில்
(வட மேற்கு மூலையில்)
செல்வ வளத்தையும்
"ஆ" லெட்சுமி
கையில்
விரும்பும்
பொருளாகவும்
இருளில் (இரவு)
வெளியில்
உலவும்
தீய ஆற்றல்களை
விரட்ட
காவல் தெய்வமாக
வீட்டின்
முற்றத்தில் (முகப்பு)
நோய்வாய்
மன நோய்
பாதிக்கப்பட்டவர்கள்
முதியவர்கள்
குழந்தைகள்
வாழும்
இல்லங்களில்
காவல் தெய்வமாக...

சிறு பறவைகள்
கூடுகட்டி வாழ
குச்சியை தந்துதவும்
கருணையுள்ளமே!
எக்காலத்திலும்
தன்னிலை மாறாத
உன்னிடத்தில்
என் நிலை மாற
விரும்புகிறேன்
வழிமுறை யொன்று
தீ நுண்மீ(ணீ) யால்
வந்த வினைகள் (துன்பங்கள்) நீங்கி வாழ்வில்
இன்பம்
மலர....
வந்த திசையறிந்து
அ(ஒ) ழித்துவிடு
கொடும் கரிசியை(பாவி)
வழிமரபுகளும்
உனை வணங்க
வாழ...
ஒற்றுமையெனும்
விளக்கு மாற்றால்.
திசை
திருவள்ளுவர்: உலகுக்கு வாழ்வியல் கற்றுக்கொடுத்த தமிழின் மாபெரும் புலவர்!
Short Story: இப்படியும் ஒரு மாமியார்!
RIP Chef Dhamu.. மணக்க மணக்க சமைத்து சாதனை படைத்த.. செஃப் தாமு மறைந்தார்
வெளுத்து வாங்கும் மழை: நீலகிரிக்கு 'ரெட் அலர்ட்'...5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
காங்கேயம் காளைகளின் கம்பீரம்.. நாட்டு மாட்டுப் பால்.. கொங்கு நாட்டின் பெருமைகள்!
தென்தமிழ் தலையங்கம்: உலக இளம்பிள்ளை வாத நாள் - இன்னும் தொடரும் போராட்டம்!
மழை பொழியும் மலைகள், கரைபுரண்டு ஓடும் ஆறுகள்.. மயங்க வைக்கும் மருத நிலம்!
சினத்தால் அறமும் கெடும் சிந்திக்கா செய்கை கெடும்.. ஔவையின் பொன்மொழி 60 (7)
{{comments.comment}}