Short Story: இப்படியும் ஒரு மாமியார்!

Oct 25, 2026,11:06 AM IST

- முனைவர் என். பத்ரி


விடிந்தால் புது வீட்டு புகுமணை விழா. எப்படி இவ்வளவு பெரிய  பெரிய விழாவை நடத்தி முடிக்கப் போகிறோம். நினைத்துப் பார்க்கவே லதாவுக்கு பிரமிப்பாக இருந்தது. மானசீகமாக மாமியாருக்கு நன்றி சொன்னாள். லதா மிகவும் பதட்டமாக இருந்தாள்.எதிரே வந்த அம்மாவைக் கூட கண்டுக்கவே இல்லை.பாவம் அவளுக்கு அவ்வளவு வேலை!


லதாவுக்கும் குமாருக்கும் திருமணம் ஆகி ஆறுமாதம்தான் மாதமாகிறது. அவள் ஒரு பணக்கார வீட்டுப் பெண். மேலும் ஓர் ஐடி கம்பெனியில் பணிபுரிந்து வருகிறாள். 30 வயது மட்டுமே நிரம்பிய இளைஞி. வாலிப வயதின் கனவுகள் அவளின் இதயத்தில் ஆயிரம் ஆயிரம். அவற்றையெல்லாம் அனுபவிக்க  நெஞ்சம் நிறைய ஆசைகள் அவளிடம். அவற்றை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ள அவளிடமும் பணமும் ஏராளம் இருக்கிறது.பிறகென்ன? தினமும் ஓட்டலும் சினிமாவும்தான்.


ஆனால், லதாவின் மாமியார் கமலா எதையும் பார்த்து, பார்த்து செலவு செய்பவள். தினமும் ஹோட்டலுக்கும் சினிமாவுக்கும் புது ஜோடி செலவு செய்து வருவது அவளுக்கு துளியும் பிடிக்கவில்லை. ஆனால் புது மனைவி லதா சொல்படி கேட்க வேண்டிய சங்கடமான நிலை குமாருக்கு.


ஏதாவது  அவளைக் கேள்வி கேட்டால்,’’ புது கணவன் மனைவிக்குள் பிரச்சனை எதுவும் வந்து  விடுமோ?’’ என்ற கவலை அவனுக்கு. கமலாவுக்கும் இந்த கவலை இருந்தது. ஆனால் இப்படியே ஆடம்பரமாக செலவு செய்து வந்தால் விரைவில்  பணமெல்லாம் கரைந்து  வீடு கடனில் வீழந்து விடும். இந்தக் கவலை அவளுக்கு. இந்த காலத்து இளைஞர்களின் நுகர்வு கலாச்சாரம் பற்றி உங்களுக்குத் தெரியாதா என்ன?




அதனால் இதற்கு ஒரு தீர்வை ஒன்றைக் காண விரும்பினாள் மாமியார் கமலா. அன்று காலை லதாவை அன்பாக அழைத்தாள். எதிரில் இருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னாள். ஆச்சரியத்தில்  உறைந்த போன லதா அவளுக்கு எதிரில் இருந்த நாற்காலியில்  அமைதியாக உட்கார்ந்தாள்.


மெல்லப் பேசத் தொடங்கினாள் கமலா.  லதா,” நீ இந்த வீட்டிற்கு மருமகளாக வந்து விளையாட்டாக ஆறு மாதம் ஆகிவிட்டது. எங்களுக்கும் வயதாகி விட்டது. குமாருக்கும் அலுவலக வேலை அதிகமாக இருக்கிறது. எனவே,  இனி வீட்டுப் பொறுப்பையெல்லாம்  கவனிக்க எங்கள் உடலிலும்,மனதிலும் பலம் இல்லை. அதனால், இனிமேல் இந்த வீட்டு பொறுப்பை எல்லாம் இனிமே நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று வீட்டு கணக்கு அனைத்தையும் அவளிடம் ஒப்படைத்தாள். பீரோ சாவியையும் அவளிடம் ஒப்படைத்து விட்டாள்.


”ஒவ்வொரு நாளும் வீட்டில் ஆகும் செலவினை கணக்கெடுத்துக் கொள். வரவுகளையும் எழுதிவா. மாதாந்திர கடைசியில் வரவு -செலவு- இருப்பு இவற்றை பார்த்துக் கொள்” என்று சொல்லிவிட்டு அவளின் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் கமலா நகர்ந்தாள். போகிற போக்கில், ”வீட்டிற்குப் பின்னால் உங்களுக்கென  ஒரு வீடு கூட கட்டிக் கொள்.உனக்கு நமது பொறியாளர் கைப்பேசி எண்ணையும் அனுப்பிவைக்கிறேன்”என்று சொன்னவள் அனுப்பியும் வைத்தாள்.


எல்லாவற்றையும் சரியாக கேட்டுக் கொண்ட லதாவுக்கு தலை சுற்றியது. அந்த மாதக் கடைசியில் வருமானத்தை விட செலவுதான் அதிகமாக இருந்தது. ”தான் அனாவசியமாக எங்கெங்கே செலவு செய்கிறோம்” என்பதை பார்த்து வரத் தொடங்கினாள். வேண்டாத செலவுகளை எல்லாம் குறைக்கத் தொடங்கினள் லதா. மாமியார் சொன்னபடி காலி இடத்தில் ஓர் அழகான வீட்டையும் கட்டத் தொடங்கினாள். அந்த வீட்டின் புகுமணை விழாதான் இன்று…


கமலாவுக்கும் சந்தோஷம். மனைவியின் ஆடம்பர செலவு குறைந்தது  குறித்து குமாருக்கும் மகிழ்ச்சி. லதாவுக்கும் பொறுப்பு வந்தது. யாரையும் புண்படுத்தாமல் குடும்பத்தை சிக்கனமாக நடத்த மருமகளுக்கு கற்றுக் கொடுத்த அம்மாவை மனமார பாரட்டினான் குமார்.


பொழுது விடியத் தொடங்கியது. தூங்கிக் கொண்டிருந்த தன் கணவனைத் தட்டி எழுப்பினாள்.’நம்ம வீட்டு பஃக்‌ஷன். இப்படி தூங்கிக் கொண்டு இருந்தால் எப்படி?’’ என்றாள். குமாரும் புகுமனை விழாவுக்கு தயாரானான். அம்மவைப் பார்த்து சிரித்தபடி. 


தனக்கென தானே வீடு கட்டிய லதாவின் மனம் மாமியாரைப் பாராட்டியது. அவளுக்குள் இருந்த திறமையைக் காட்டிக்  கொடுத்தவள் அவள்தானே? மருமகள் மெச்சிய மாமியாரானாள் கமலா. இப்படியும் ஒரு மாமியாரா? லதாவின் மனமெல்லாம் மத்தாப்புதாண்.


(இன்று மாமியார்கள் தினம்)


(டாக்டர். என். பத்ரி சுமார் 50 ஆண்டுகள் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியராகத் தொடங்கி, பள்ளித் தலைமை ஆசிரியர், கல்வியியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் எனப் பல தளங்களில் பணியாற்றி, தற்போது பொறியியல் கல்லூரியின் கௌரவ ஆங்கிலப் பேராசிரியராக விளங்குபவர். கல்வியியல் மற்றும் ஆங்கிலத்தில் முனைவர் பட்டம், 4 முதுகலை பட்டங்கள் பெற்ற இவர், 1997-98-இல் தேசிய NCERT விருதைப் பெற்றவர். அகில இந்திய வானொலிக் கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றி, கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் வழியாக வழிகாட்டியுள்ளார். 'மை இங்கிலீஷ் கற்றல் அகாடமி' (MELA) நிறுவனச் செயலாளரான இவர், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க உறுப்பினராகவும், புதுவை அரசின் சிறந்த கவிஞர் விருதைப் பெற்றவராகவும் திகழ்கிறார். 800-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 100 சிறுகதைகள் எழுதியுள்ளார். முதியோர் மற்றும் இளைஞர் நலனை மையமாகக் கொண்டு 'முதுமை ஒரு வரம்', 'வாய்ப்புகள் வெற்றிகள் ஆகட்டும்' உட்பட பல நூல்களைப் படைத்துள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திசை

news

திருவள்ளுவர்: உலகுக்கு வாழ்வியல் கற்றுக்கொடுத்த தமிழின் மாபெரும் புலவர்!

news

Short Story: இப்படியும் ஒரு மாமியார்!

news

RIP Chef Dhamu.. மணக்க மணக்க சமைத்து சாதனை படைத்த.. செஃப் தாமு மறைந்தார்

news

வெளுத்து வாங்கும் மழை: நீலகிரிக்கு 'ரெட் அலர்ட்'...5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

news

காங்கேயம் காளைகளின் கம்பீரம்.. நாட்டு மாட்டுப் பால்.. கொங்கு நாட்டின் பெருமைகள்!

news

தென்தமிழ் தலையங்கம்: உலக இளம்பிள்ளை வாத நாள் - இன்னும் தொடரும் போராட்டம்!

news

மழை பொழியும் மலைகள், கரைபுரண்டு ஓடும் ஆறுகள்.. மயங்க வைக்கும் மருத நிலம்!

news

சினத்தால் அறமும் கெடும் சிந்திக்கா செய்கை கெடும்.. ஔவையின் பொன்மொழி 60 (7)

அதிகம் பார்க்கும் செய்திகள்