- பூரணவள்ளி சேகர்
ஸ்வேதா ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்வாகி பக்கத்து ஊரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
பள்ளியில் முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டது. ஸ்வேதா மிகவும் வேகமும் விவேகமும் நிறைந்த ஆசிரியர். இன்னும் திருமணம் ஆகவில்லை. பணிக்கு சேர்ந்த புதிதில் தினமும் குழந்தைகளை சமாளிப்பதை ஒரு சவாலாக ஏற்று பணி செய்து வந்தார்.
ஸ்வேதாவிற்கு அழும் குழந்தையை சமாளிப்பது தான் பெரிய சவால். பாடம் சொல்லிக் கொடுப்பதில் ஸ்வேதா மிகவும் திறமைசாலி. ஆடியும் பாடியும் நடித்தும் குழந்தையோடு குழந்தையாக மாறிவிடுவார்.
குழந்தைகள் ஸ்வேதாவின் மேல் அதிகமான அன்புடன் நடந்து கொள்வார்கள். காலப்போக்கில் அழும் குழந்தையைக் கூட எளிதாக சமாளிக்கும் திறமை ஸ்வேதா விடம் அதிகரித்தது.
கனிவும் கண்டிப்பும் ஸ்வேதா விடம் நிறைந்திருந்தது. ஸ்வேதா ஒரு நாள் விடுப்பு எடுத்தால் கூட மாணவர்கள் மிகவும் தன் ஆசிரியரைத் தேட ஆரம்பித்து விடுவார்கள்.

ஆண்டுகள் கடந்து ஸ்வேதாவிற்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் பிறந்தது. குழந்தை வளர்ப்பு பற்றி எனக்கு எல்லாம் தெரியும். என் குழந்தையை எளிதாகக் கையாள்வேன் என்று மிகவும் தைரியமாக இருந்தார் ஸ்வேதா.
குழந்தை வளர்க்கும் போது ஏற்படும் இடர்பாடுகளை பெரியவர்கள் மற்றும் மற்ற ஆசிரியர்களின் உதவியுடன் சமாளித்தார். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி இருப்பார்கள் என்பது தன் குழந்தையை வளர்க்கும் போதுதான் ஸ்வேதாவிற்குத் தெரிந்தது.
ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு கனவுலகில் இருப்பார்கள். நம்முடைய திறமையான செயல்பாடுகளால் எல்லாரையும் கட்டுப்படுத்த முடியாது என்று ஸ்வேதா உணர்ந்தாள்.
அடுத்த குழந்தை பிறந்த பிறகு இரு குழந்தைகளையும் சமாளிக்க மிகவும் சிரமப்பட்டார். தனக்குக் குழந்தை வளர்ப்பு பற்றி ஆயிரம் வழிகள் தெரிந்தாலும் தனக்குக் குழந்தை பிறந்த பிறகு தான் தெரிந்தது அதில் ஒன்று கூட உதவாது என்று ஸ்வேதா உணர்ந்ததை பிறருக்கும் கூறினார்.
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)
கோடை எப்எம் மட்டும்தான் - அதுவும் 2 மணி நேரம்தான் - மறக்க முடியாத ஸ்கூல் டேஸ்!
குழந்தை வளர்ப்பு.. ஒரு நிமிடக் கதை (44)
சமையல் With ஸ்வர்ணா: ஸ்ப்ரவுடட் சன்னா வெஜிடபிள் சாலட் -வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்!
குயவன்!
மழை!
ஈரோடு வந்திருக்கீங்களா- கோணப் புளியங்கா சாப்பிட்டிருக்கீங்களா? - சொல்றேன் கேளுங்!
துலா ஸ்நானம் என்றால் என்ன?- ஐப்பசி மாதம் தோன்றிய விதம் இதுதான்!
ஆதலினால் காதல் செய்வீர்!
சிறகிருந்தால் வானம் கேட்கவும்
{{comments.comment}}