- ஸ்வர்ணலட்சுமி
நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதில் பயறு வகைகள் முக்கியமானவை. குறிப்பாக கொண்டைக்கடலை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பயறு ஆகும். இதை வைத்து அருமையான சாலட் செய்து சாப்பிட்டுப் பாருங்க.. செம டேஸ்ட்டியாகவும் இருக்கும், ஆரோக்கியத்திற்கும் ரொம்ப ரொம்ப நல்லது.
ஸ்புரவுடட் சன்னா வெஜிடபிள் சாலட் செய்வது எப்படி.. வாங்க பார்க்கலாம்.. இதுக்கு கிச்சனுக்கெல்லாம் போகத் தேவையில்லை.. ஹாலில் இருந்தபடியே கூட செய்யலாம். அவ்வளவு சிம்பிள்ங்க!
1.வேக வைத்த ஸ்ப்ரவுடட் சன்னா ஒரு கப்,
2.கேரட் ஒரு கப் கட் செய்தது,
3.வெள்ளரிக்காய் ஒரு கப் கட் செய்தது,
4.பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கவும்,
5. நறுக்கிய மல்லித்தழை சிறிதளவு,
6. கருப்பு உப்பு (black salt) அல்லது இந்துப்பு (rock salt).
7. மிளகுத்தூள் தேவைக்கு ஏற்ப.
8. வேகவைத்த ஸ்வீட் கான் இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம்.
இவை அனைத்தையும் ஒரு பவுலில் சேர்த்து கலக்கினால் சூப்பரான டேஸ்டியான ஸ்ப்ரவ்டட் சன்னா வெஜிடபிள் சாலட் ரெடி. இதை அப்படியே எடுத்து சாப்பிடலாம்... இது ஒரு நல்ல ஃபில்லிங் ஆன உணவு.
அடுத்து கொண்டைக்கடலை முளை கட்டுவது எப்படி? ஈஸியான டிப்ஸ் இதோ... வாங்க பாஸ் பார்க்கலாம்

1. ஒரு கப் (இரவில்) கொண்டைக்கடலையை நன்றாக மூன்று முறை கழுவி தண்ணீர் ஊற்றி ஊறவைக்க மூடி வைக்கவும். சுமார் 8 to 9மணி நேரம் ஊற வேண்டும்.
2. காலை எழுந்தவுடன் தண்ணீரை வடித்து ஈரப்பதத்துடன் ஒரு டப்பாவில் போட்டு முடி வைக்கவும்.
3. இந்த டப்பாவை அப்படியே கிச்சனில் வைக்க வேண்டும்.
4. 24 மணி நேரம் கழித்து சிறு சிறு முளை விட்டிருக்கும்.
5. 48 மணி நேரத்தில் ஒரு இன்ச் அளவிற்கு முளை வந்துவிடும்.
6. பார்க்கவே அவ்வளவு அழகாக நீளமான முளை விட்டிருக்கும். இவ்வளவு முளை வந்தால் போதும். சமையலுக்கு
பயன்படுத்தலாம்.
குறிப்பு: மிதமான வெப்பநிலையில் வைக்க வேண்டும். ஃப்ரிட்ஜில் வைக்கக் கூடாது.
இன்னொரு முறையிலும் சன்னா முளை கட்டலாம்.
1. தண்ணீரில் ஊறிய சன்னாவை எடுத்து தண்ணீர் வடித்து ஈரப்பதத்துடன் ஒரு மஸ்லின் துணியில் மூட்டை கட்டி ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும்.
2. அந்த பாத்திரத்தை ஒரு தட்டு போட்டு மூடி வைக்க வேண்டும்.
3. 24 மணி நேரம் கழித்து லேசாக தண்ணீர் தெளிக்க வேண்டும். பயறு சிறு சிறு முளை விட்டிருக்கும்.
4. 48 மணி நேரம் கழித்து நல்ல நீளமான முளைவிட்டு விடும். பயறு முளைகள் துணியை கிழித்து வெளியில் வந்துவிடும்.
5. இந்த முளைவிட்ட பயரை சமைக்க பயன்படுத்தலாம்.
முளைக்கட்டுவதற்கு மேலும் ஒரு முறையும் உள்ளது.. அதையும் கேளுங்க

1. மண்சட்டி பயன்படுத்துபவர்கள் தண்ணீரில் ஊறிய சன்னாவை தண்ணீர் வடித்து மண்சட்டியில் வைத்து ஒரு மூடி போட்டு மூடி விட வேண்டும்.
2. மறுநாள் சிறு சிறு முளை வந்துவிடும்.
3. இரண்டாவது நாள் நல்ல நீளமான சன்னா முளை விட்டிருக்கும்.
எது எதுக்கோ மெஷின் கண்டுபிடிச்சிட்டோம். முளை கட்டுவதற்கு மட்டும் கண்டுபிடிக்காம இருப்போமா.. இப்போது மார்க்கெட்களில் முளை கட்டுவதற்கு என்று ஸ்ப்ரவுட்ஸ் பாக்ஸ் (sprouts box) வந்துவிட்டது. அதனையும் பயன்படுத்தலாம்.
முளைவிட்ட சன்னா பயறு குழம்பு, சுண்டல், சப்பாத்திக்கு குருமா, சாதத்திற்கு கூட்டுக் கறி, வெஜிடபிள் சாலட் சாப்பிடுபவர்கள் பச்சையாக இரண்டு ஸ்பூன் உண்ணலாம்.
காதைக் கொண்டாங்க பாஸ்.. முக்கியமான டிப்ஸ்!
முளைவிட்ட பயிறு சமைக்கும் பொழுது முக்கியமாக பார்க்க வேண்டியது அதில் பிசுபிசுப்பு தன்மை அல்லது பச்சையாக பூஞ்சை (fungus) இல்லாமல் இருக்க வேண்டும். ஸ்ப்ரவுடட் சன்னாவில் பிசுபிசுப்பு தன்மை இருப்பின் 1/2 ஸ்பூன் கல் உப்பு , மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் தண்ணீரில் ஊறவைத்து அதில் அந்த சன்னாவை போட்டு லேசாக முளைகள் ஒடியாமல் (ஸ்ப்ரவுட்ஸ் ஒடியாமல்) கழுவி வடிகட்டி பிறகு சமைக்க பயன்படுத்தவும்.
பயன்கள்:
கொண்டைக்கடலை பயன்கள் ஏராளம். அதிலும் கருப்பு கொண்டை கடலை ஊறவைத்து முளை விட்ட பிறகு உட்கொள்ளும்போது இதில் ஏராளமான வைட்டமின்கள், துத்தநாகம் (ஜிங்க் ) மினரல்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் இதை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைய இருக்கின்றது.
அதோடு மட்டுமல்லாமல் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் கே, நார்ச்சத்துக்கள், ரிப்போ ஃப்ளோவின், மாங்கனிசு, காப்பர்சத்து, புரதச்சத்து, தயமின், மக்னீசியம்,பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
நார் சத்துக்கள் மிகுந்த முளைக்கட்டிய கொண்டைக்கடலையில் கிளைசெமிக் குறியீடு (glycemic index ) மிகவும் குறைவு. எனவே, நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துவதோடு விரைவில் பசி எடுக்காமல் பார்த்துக் கொள்ளும்.
எனவே, 1.சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது.
2. இதில் உள்ள இரும்புச்சத்து உடலின் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்த சோகையை தடுக்கிறது.
3. முளைக்கட்டும்போது தானியங்களில் உள்ள சத்துக்கள் எளிதில் ஜீரணம் அடையும் நிலைக்கு மாறும். எனவே, ஆரோக்கியமான செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.
4. உடலுக்கு வலிமை, ஆரோக்கியமான தலைமுடி,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இந்த ஸ்ப்ரவுடட் சன்னாவில் இவ்வளவு நன்மைகளா!
மேலும் டேஸ்டியான, வகை வகையான முளைகட்டிய சன்னா ரெசிபிகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் "சமையல் வித் ஸ்வர்ணா" தென்தமிழ் எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.
குழந்தை வளர்ப்பு.. ஒரு நிமிடக் கதை (44)
சமையல் With ஸ்வர்ணா: ஸ்ப்ரவுடட் சன்னா வெஜிடபிள் சாலட் -வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்!
குயவன்!
மழை!
ஈரோடு வந்திருக்கீங்களா- கோணப் புளியங்கா சாப்பிட்டிருக்கீங்களா? - சொல்றேன் கேளுங்!
துலா ஸ்நானம் என்றால் என்ன?- ஐப்பசி மாதம் தோன்றிய விதம் இதுதான்!
ஆதலினால் காதல் செய்வீர்!
சிறகிருந்தால் வானம் கேட்கவும்
தலைமை தேர்தல் அதிகாரி நடத்திய கூட்டம்: அதிமுக தவிர அனைத்து கட்சிகளும் வெளிநடப்பு
{{comments.comment}}