- பூரணவள்ளி சேகர்
புதிய மாதம் பிறந்துவிட்டது. வாங்கிய சம்பளத்தில் வாடகை கொடுத்தாயிற்று. பட்ஜெட் போட்டு தேவையான செலவிற்கான பணம் ஒதுக்கப்பட்டது.
ரேஷனில் பொருட்கள் வாங்குவதற்காகச் சென்றான் தீபக். எப்போதும் தீபக்கின் மனைவி அனிதா தான் ரேஷன் கடைக்குச் செல்வாள்.
ஞாயிறன்று அனிதாவுக்கு வீட்டில் வேலை இருந்ததால் தீபக் சென்றான். நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பொருட்கள் வாங்கி வந்தான்.
திங்கட்கிழமை அலுவலகம் செல்லும் வழியில் பேருந்திற்காகப் பலர் காத்திருப்பதைப் பார்த்துக் கொண்டே வண்டியில் சென்ற தீபக் தன் வண்டிக்குப் பெட்ரோல் போடவும் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.
அடுத்த நாள் மாலையில் அனிதாவின் பிறந்தநாளுக்காகக் கோவிலுக்கு செல்லத் திட்டமிட்டனர். கோயிலில் கொலு வைத்திருந்ததால் பூஜைகள் முடித்து தரிசனம் முடித்து வெளியில் வர நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இரவு உணவிற்கு அருகில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலுக்குச் சென்றனர். ஹோட்டல் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
நீண்ட நேரம் காத்திருந்து சாப்பிட்டு வீட்டிற்கு வந்தனர்.

ஒரு வாரம் கழித்து குழந்தைக்கு உடல் நலம் இல்லாததால் மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கே இருந்த கூட்டத்தைப் பார்த்து தீபக் அசந்து போனான்.
எங்கே போனாலும் கூட்டம் அதிகமாக இருக்கிறதே என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்தான். ஒரு வாரம் கழித்து கடைக்குச் சென்ற தீபக்கின் தலை சுற்றியது.
அடுத்த அடுத்த பல கடைகளிலும் நீண்ட வரிசை இருந்தது. புரட்டாசி முடிந்தாலும் கொலு பண்டிகை முடிந்தாலும் மட்டன் சிக்கன் கடைகளில் தான் இவ்வளவு கூட்டம் இருந்தது.
காத்திருப்பு எல்லா இடங்களிலும் நடக்கிறது.
மக்கள் அனைவரும் ஒரே மனநிலையில் இருக்கிறோம் என்று தீபக் நினைத்துக் கொண்டான்!
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)
The Mask We Wear
தமிழகத்தில் தீவிரமடையும் பருவமழை...கொட்டி தீர்க்கும் கனமழை : 5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு - புயலாக மாறினால் முரசு என பெயர் சூட்டப்படும்!
கனாக் கண்டேனடி!
விழுந்தாலும் வேரூன்றி நிற்பேன்! - ரம்யாவின் கவிதைத் தோட்டம் (6)
கட்டுமரம் வாழ்க்கை!
"சீதனமாக அப்பா கொடுத்த ஸ்கூட்டர்!"
காத்திருப்பு.. ஒரு நிமிடக் கதை (43)
Short Story: கடமையின் பின்னே ஒரு மனிதநேயம்
{{comments.comment}}